புகாரளிக்க வந்த பொதுமக்களை தாக்கும் மின் ஊழியர்! அதிச்சியளிக்கும் வீடியோ!

பாலக்கோட்டில், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக புகார் கூறவந்தவர்கள் மீது மின்மீட்டரை தூக்கி அடித்து மின் ஊழியர்.  

Written by - RK Spark | Last Updated : Aug 12, 2022, 01:14 PM IST
  • புகார் அளிக்க வந்தவரை தாக்கும் மின் ஊழியர்.
  • தருமபுரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
புகாரளிக்க வந்த பொதுமக்களை தாக்கும் மின் ஊழியர்! அதிச்சியளிக்கும் வீடியோ! title=

தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் மின்தடை குறித்த புகாரளிக்க வந்த பொதுமக்களை மின்வாரிய ஊழியர் குப்புராஜ் என்பவர் மின் மீட்டரை கொண்டு தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு  பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த பெண்மனி ஒருவர் பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்க்கு வந்து தன்னுடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை, அதே போல் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக புகார் அளித்தார். 

அப்போது உதவி மின்பொறியாளர் இல்லாததால் பணியில் இருந்த வணிகவிற்பனையாளர் குப்புராஜ் என்பவருக்கும், புகார் கொடுக்க வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மின்ஊழியர் குப்புராஜ், நான் ஆப்பீசர் பார்த்து பேசு என கூறிவிட்டு அலுவலகத்திற்குள் சென்றார். அப்போது, புகார் கொடுக்க வந்தவர்கள் குப்புராஜியை மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர். 

 

மேலும் படிக்க | போலி கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கர் மூலம் நூதன பண மோசடி! ஊர்காவல் படை வீரர் கைது

இதனால் ஆத்திரமடைந்த குப்புராஜ் வந்தனே மவனே ஒரே அடி அடிச்சிடுவேன் என அங்கு அடுக்கி வைத்திருந்த மின்மீட்டரை எடுத்து வீடியோ எடுத்தவர் மீது தூக்கி வீசினார். அதில் அதிஷ்டவசமாக புகார் கொடுக்க வந்தவர் காயமின்றி தப்பினர். இது குறித்து மின்வாரியத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | தர்மபுரி மாணவி தீக்குளித்து தற்கொலை! வாக்குமூலத்தில் வெளியான சோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News