கோவை கார் வெடிப்பு வழக்கு: 20க்கும் மேலான இடங்களில் என்ஐஏ சோதனை - சிக்கியவர்கள் யார் யார்?

NIA Raid In Tamil Nadu Latest News: 2022இல் கோவையில் நடந்த கார் வெடிப்பு வழக்கில், தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனையில் ஈடுபட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 10, 2024, 08:58 AM IST
  • கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் 2022ஆம் ஆண்டில் நடந்தது.
  • இந்த வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
  • கோவையில் மட்டும் 12 இடங்களில் சோதனை என தகவல்
கோவை கார் வெடிப்பு வழக்கு:  20க்கும் மேலான இடங்களில் என்ஐஏ சோதனை - சிக்கியவர்கள் யார் யார்? title=

NIA Raid In Tamil Nadu Latest News: சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (NIA - National Investigation Agency) இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதாவது 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, ஜமேசா முபீர் ஓட்டி வந்த கார், அதிகாலை 4:30 மணிக்கு வெடித்தது. போலிசார் நடத்திய விசாரணையில் இது சதி செயல் அரங்கேற்ற திட்டமிடப்பட்ட, கார் வெடிப்பு (கார் குண்டு வெடிப்பு) சம்பவம் என்பது விசாரணையில் தெரியவந்தன.

இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது

இந்த நிலையிலே, இந்த வழக்கு தேசிய முகமை அதிகாரிகள் விசாரணைக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்கில் விசாரணையின் போது, தமிழ்நாடு காவல் துறையால் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதன் பின்னர் தேசிய முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணை அடிப்படையிலும் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க | எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்தால் நானும் செய்கிறேன் - ஆ.ராசா

இதுவரை இந்த வழக்கில் மொத்தம் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை தொடர்ந்து நடத்திவரும் என்ஐஏ அதிகாரிகள், அவ்வப்போது சோதனைகளில் ஈடுபட்டு வருவது வழக்கமாகும். 

யார் யார் வீட்டில் சோதனை?

அந்த வகையில், இன்று கோவை அல் அமீன் காலனி பகுதியைச் சார்ந்த ரகுமான் என்பவர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். ரகுமான் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வருகின்றார். இவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர். ரகுமான் வீடு மட்டும் இன்றி, கோவை மாவட்டம் முழுவதும் 12 இடங்களில், அதிகாலை முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பக்ருதீன் என்பவர் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் ஆவார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் என்ஐஏ காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பரத் நயக் தலைமையிலான நான்கு பேர் கொண்ட அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு சென்ற அவர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த தெருவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் ஏதேனும் ஆதாரங்கள் சிக்கி உள்ளதா என்பது குறித்து சோதனை முடிவுற்ற பின்பு தெரிய வரும் என போலிஸ் வட்டாரங்களில் தெரிவிக்கின்றன. இதுபோன்ற மதுரையிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை நிலவரம்

மதுரை ஹாஜிமார் தெரு பகுதியில் உள்ள சாமியார் சந்து பகுதியில் வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரான அலிஜிகாத் (எ) முகமது அபுதாஹிர் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

காலையில் வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜிகாத் அலி வருகை தந்தார். தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை நடத்தி ஜிகாத் அலியிடம் விசாரணை நடத்த உள்ளனர். கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

திருச்சி நிலவரம்

கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக, திருச்சி பீமநகர் கூனிபஜார் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாநகரம் பீமநகர் கூனிபஜாரை சேர்ந்த அஷ்ரப் அலி என்பவர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. அஷ்ரப் அலி என்பவர் திருச்சி மாநகர் மலைக்கோட்டை சிங்கார தோப்பு பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

திருச்சி மலைக்கோட்டை சிங்கார தோப்பு பகுதியில் உள்ள அஷ்ரப் அலி கடைக்கு சென்ற என்ஐஏ அதிகாரிகள் கடைப்பூட்டி இருந்ததால் தற்பொழுது அவரது வீட்டிற்கு வந்து சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | விஜய் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் நீக்கம்! திமுகவில் ஐக்கியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News