விக்ரம் வேதா ஸ்டைலில் இஷானுக்கு வாழ்த்து கூறிய கில்! ஹ்ரித்திக் ரோஷனின் ரிப்ளை!

India vs South africa: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 11, 2022, 08:52 AM IST
  • 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி.
  • தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.
  • இன்று 3வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
விக்ரம் வேதா ஸ்டைலில் இஷானுக்கு வாழ்த்து கூறிய கில்! ஹ்ரித்திக் ரோஷனின் ரிப்ளை! title=

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்ற பிறகு, சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்தில் வரும் காட்சி போலவே, ஷுப்மான் கில் இஷான் கிஷனை தனிப்பட்ட முறையில் வாழ்த்தினார்.  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் அசத்தியது. ஷ்ரேயாஸ் ஐயர் 111 பந்துகளில் 113 ரன்களும், இஷான் கிஷான் 84 பந்துகளில் 93 ரன்களும் எடுக்க, இந்தியா 279 ரன்கள் இலக்கை 45.5 ஓவர்களில் துரத்தியது. 

மேலும் படிக்க | பும்ரா இல்லை - உலகக்கோப்பையில் இந்தியாவை காப்பாற்றப்போவது யார்? - இதோ!

இந்த அபார வெற்றிக்கு பிறகு, கீழ் விக்ரம் வேதா திரைப்படத்தைப் போலவே இஷானின் கன்னத்தில் தன் கைகளை வைத்து வாழ்த்தியுள்ளார்.  அந்த வீடியோவையும் கில் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவிற்கு ஹ்ரித்திக் ரோஷன் சிரிப்பது போல கமெண்ட் செய்துள்ளார்.  இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஷிகர் தவான் தலைமையிலான அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.

 

தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் ஷுப்மான் கில் இருவரையும் இழந்த பிறகு இந்தியா ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்திருந்தது, ஆனால் ஐயர் மற்றும் கிஷான் இடையேயான 161 ரன் பாட்னர்ஷிப் இந்தியா 25 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற உதவியது.  எய்டன் மார்க்ரம் (79), ரீசா ஹென்ட்ரிக்ஸ் (74) ஆகியோர் தென்னாப்பிரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுக்க உதவினர். முகமது சிராஜ் 10 ஓவர்களில் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இன்று கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.

மேலும் படிக்க | கோடிக்கணக்கில் ஐபிஎல் சம்பளம்! ஆனாலும் உலக கோப்பையில் இடம் இல்லை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News