ஆர்சிபி மட்டும் இல்லை! 2008 முதல் இந்த 2 அணிகளும் கோப்பை வென்றது இல்லை!

Royal Challengers Bangalore: ஐபிஎல்-லின் 17வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.  சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பை வென்றுள்ள நிலையில், சில அணிகள் ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை.   

Written by - RK Spark | Last Updated : Mar 13, 2024, 07:32 PM IST
  • 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் நடைபெறுகிறது.
  • ஆர்சிபி ஒருமுறை கூட கோப்பை வென்றது இல்லை.
  • இன்னும் 2 அணிகளும் கோப்பை வென்றது இல்லை.
ஆர்சிபி மட்டும் இல்லை! 2008 முதல் இந்த 2 அணிகளும் கோப்பை வென்றது இல்லை! title=

Royal Challengers Bangalore: ஐபிஎல் 2024 போட்டிகள் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த வருடம் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் முதல் இரண்டு வாரங்களுக்கான அட்டவணை மட்டுமே வெளியாகி உள்ளது, மீதம் உள்ள போட்டிகள் தேர்தல் முடிந்த பின்பு நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் பைனல் போட்டி மே 26ம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி விருதை வென்றார் இளம் அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டியின் 17வது சீசன் இந்த ஆண்டு நடைபெறுகிறது.  சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா ஐந்து முறை கோப்பை வென்றுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2008 முதல் ஐபிஎல்-ன் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.  ஆனால் தற்போது வரை ஒரு முறை கூட ஐபிஎல் பட்டத்தை வென்றதில்லை. ஆர்சிபி தவிர, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஒருமுறை கூட ஐபிஎல் பட்டத்தை வென்றதில்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறது.  ஆனாலும் ஐபிஎல் கோப்பையை ஒருமுறை கூட வென்றதில்லை. இந்த அத்தனை சீசனிலும் ஆர்சிபி அணியில் இடம்பிடித்த ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் 2009 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2009ல் டெக்கான் சார்ஜர்ஸிடம் தோல்வி அடைந்தனர் மற்றும் 2011ல் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக தோல்வியடைந்தனர். விராட் கோலி இரண்டு இறுதிப் போட்டிகளிலும் விளையாடினார்.  

விராட் கோலி 2013ம் ஆண்டு முதல் ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது கேப்டன்சியின் கீழ் ஆர்சிபி ஐபிஎல் 2016ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தனர். அதன் பிறகு ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. ஐபிஎல் 2022 முதல் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.  ஆனாலும் அவர்களால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியவில்லை.  கடந்த ஐபிஎல் 2022ன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி, 2023ல் லீக் கட்டத்தில் இருந்து வெளியேறியது.  ஐபிஎல் 2024ல் எப்படியாவது கோப்பையை வெல்ல கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.  

டெல்லி கேப்பிடல்ஸ் 

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல்லில் விளையாடி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் டெல்லி அணி 2020 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடியது. ஆனால் அந்த இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் தோற்றது. ஐபிஎல் 2013 முதல் 2018 வரை டெல்லி கேபிடல்ஸ் ஆறு சீசன்களில் லீக் கட்டத்தை தாண்ட முடியவில்லை. 2019ல் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.  ஐபிஎல் 2021 முதல் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு ஐபிஎல்லில் பங்கேற்காத ரிஷப் பந்த் இந்த ஆண்டு டெல்லி அணியின் கேப்டனாக திரும்ப உள்ளார். 

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் அதிக தோல்விகளை சந்தித்த அணிகளில் ஒன்று ஆகும். கடந்த 16 சீசன்களில் இரண்டு முறை மட்டுமே லீக் கட்டத்தை தாண்டியுள்ளனர். அவர்கள் ஐபிஎல் 2008ல்  அரையிறுதிக்கு முன்னேறினர், 2014ல் முதல் முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடினர். பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணி ஐபிஎல் 2008 முதல் பல கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களை மாற்றியுள்ளது. ஆனாலும் அவர்களுக்கு எதுவும் பலனளிக்கவில்லை.

மேலும் படிக்க | Rishabh Pant: ரிஷப் பந்த் குறித்து முக்கிய அப்டேட் வெளியிட்ட பிசிசிஐ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News