MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!

Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.  

Written by - RK Spark | Last Updated : Apr 14, 2024, 09:59 AM IST
  • தீபக் சாஹர் அணிக்கு திரும்ப வாய்ப்பு.
  • 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்பு.
  • போட்டியை வெல்ல இரு அணிகளும் தீவிரம்.
MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்! title=

Mumbai Indians vs Chennai Super Kings: ஐபிஎல் 2024ன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி இன்று நடைபெறுகிறது. வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்கிறது. இதனால் இந்த போட்டி பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் கடுமையாக விளையாடும் என்பதில் சந்தேகமே இல்லை. ஐபிஎல் 2024ல் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் மும்பை அணி 2 போட்டிகளிலும், சென்னை அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் வருகின்றன. இந்த முக்கியமான ஆட்டத்திற்கு சென்னை அணி சில மாற்றங்களை செய்ய வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | சிஎஸ்கேவில் இந்த 5 வீரர்கள் முக்கியம்... வான்கடேவில் மும்பையை ஈஸியாக வீழ்த்தலாம்!

கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் சென்னையின் அணியின் முக்கிய வீரர்களான தீபக் சாஹர், மதீஷா பத்திரனா ஆகியோரின் காயம் காரணமாக விளையாடவில்லை. இன்றைய போட்டியில் இவர்கள் இரண்டு பேரும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சாளர்களை விட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வான்கடே மைதானம் உதவக்கூடும் என்பதால், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனாவிற்கு பதில் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் இடம் பெற வாய்ப்புள்ளது. இந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடிய ஷர்துல் தாக்கூர் இந்த போட்டியில் நீக்கப்படலாம்.  சென்னை அணி முஸ்தாபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே, தீபக் சாஹர், பதிரான ஆகிய நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடம் களமிறங்கலாம்.

பேட்டிங்கில் பெரிதாக மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரன் ஓப்பனிங் செய்ய, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல் மற்றும் ஷிவம் துபே போன்றவர்கள் மிடில் ஆர்டரில் களமிறங்குவார்கள்.  சென்னை அணியின் பலமே பேட்டிங் என்பதால் முதலில் பேட் செய்தால் பெரிய இலக்கை நிர்ணயிக்க நிச்சயம் முயற்சி செய்வார்கள். கடந்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டியில் இரண்டு முறை சென்னை மற்றும் மும்பை அணிகள் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் சென்னை அணிதான் வெற்றி பெற்று இருந்தது.  அதே சமயம் மும்பை மற்றும் சென்னை அணிகள் இதுவரை 36 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதில் மும்பை 20 போட்டிகளில் வென்றுள்ளது, சென்னை 16 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

சென்னை மற்றும் மும்பை உத்ததேச அணி:

மும்பை ப்ளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (விகீ), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கே), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி, ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால்

மும்பை இந்தியன்ஸ் இம்பாக்ட் பிளேயர்: டெவால்ட் ப்ரீவிஸ், நமன் திர், நேஹால் வதேரா, ஹார்விக் தேசாய், ஷ்ரேயாஸ் கோபால்

சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கே), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விகீ), ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா

சென்னை சூப்பர் கிங்ஸ் இம்பாக்ட் பிளேயர்: மொயீன் அலி, ஷேக் ரஷித், மிட்செல் சான்ட்னர், நிஷாந்த் சந்து, தீபக் சாஹர்

மேலும் படிக்க | MI vs CSK: இது புதிய கேப்டன்களின் El Clasico - வான்கடே ஆடுகளத்தில் அட்வான்டேஜ் யாருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News