யூரிக் அமிலத்தை குறைக்க சிறப்பான வழி! 3 மாதங்களுக்கு நோ அசைவம்! ஒன்லி சைவம்

Uric Acid And Food: யூரிக் அமிலம் அதிகரித்தால், அது ஆரோக்கியத்திற்குக் பல வழிகளில் தீங்கு விளைவிக்கும்.கால்களில் வலி அதிகரிப்பு, மூட்டுவலி, சிறுநீரக கற்கள் உருவாவது மற்றும் இதய நோய் என பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம் 

யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க, குறைந்தது 3 மாதங்களுக்கு சைவ உணவைப் பின்பற்ற வேண்டும் என்று இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் கூறுகிறார். 

1 /8

யூரிக் அமிலம் வளர்சிதை மாற்ற ஒழுங்குமுறை மற்றும் சிக்னலிங் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள பல புரதங்களின் பண்புகளை பாதிக்கிறது என்று அண்மை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

2 /8

யூரிக் அமிலத்திற்கும் புற்றுநோய்க்கும் இடையிலான உறவு விரிவாக ஆராயப்பட்டது. இந்த மதிப்பாய்வில், புற்றுநோயில் யூரிக் அமிலத்தால் ஏற்படும் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்கள் பற்றி ஆராயப்பட்டது.  அதன்படி, யூரிக் அமிலம் அதிகரித்தால், அது புற்றுநோய் வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.

3 /8

யூரிக் அமிலத்தின் சுரப்பைக் கட்டுப்படுத்த, காய்கறிகளின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பாக கீரை மற்றும் கோஸ் போன்ற பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்

4 /8

பாகற்காய், சுரைக்காய் போன்ற நீர்க்காய்களை அதிகம் உண்டால் யூரிக் அமில சுரப்பு கட்டுப்படும்

5 /8

3 மாதங்களுக்கு எந்த அசைவ உணவையும் சாப்பிட வேண்டாம், ஏனென்றால் சிவப்பு இறைச்சியை சாப்பிடுவது பொதுவாக யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது, இது உங்கள் அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதிக்கும்

6 /8

அன்றாட வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் யூரிக் அமிலம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்பதால், உணவுக்கட்டுப்பாடு அவசியம்

7 /8

வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும். உணவுகளை சேமித்து வைத்து உண்பதும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பதையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை