Ayurved: உடல் ஃபிட்டா இருக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் அஞ்சறைப் பெட்டி பொருட்கள்!

Ayurveda To Manage High Cholesterol: அதிக கொலஸ்ட்ரால் அளவுகளால் அவதிப்படுபவர்கள், வீட்டில் இயற்கையாகவே எல்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு இந்த அற்புதமான ஆயுர்வேத மூலிகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உயிரணுக்களில் காணப்படும் மெழுகு, கொழுப்புப் பொருளாக அறியப்படுகிறது, இது வைட்டமின் டி உற்பத்தி, ஹார்மோன் உற்பத்தி மற்றும் செல் சுவர் அமைப்பு ஆகியவற்றுக்கு கொழுப்புச் சத்து அவசியம். ஆனால், உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் பல நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இதயம் முதல் சிறுநீரக பாதிப்பு என அதிகப்படியான கொலஸ்ட்ரால் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். 

1 /7

ஆயுர்வேதம், கொழுப்பின் அளவை நிர்வகிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மசாலாப் பொருட்களை பரிந்துரைக்கிறது. பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் உள்ள இந்த உணவுப் பொருட்கள் கொலஸ்ட்ரால் குறைப்பதில் கில்லாடிகள் என நிரூபிக்கப்பட்டவைகள் ஆகும். கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தீர்க்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் எளிய உணவுப் பொருட்களை பயன்படுத்துவதே இயற்கையான சுலபமான தீர்வு... ஆயுர்வேதம் பரிந்துரைக்கும்

2 /7

குர்குமின் நிறைந்த ஒரு அற்புதமான மசாலா மஞ்சள், இது அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரம்பியது, இது எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கும் திறன் கொண்டது. மேலும், அதன் ஆக்ஸிஜனேற்ற அம்சங்கள் மற்றும் கொலஸ்ட்ரால் ஆக்சிஜனேற்றம் தடுப்பு ஆகியவை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

3 /7

இந்தியாவில் மிகவும் புனிதமானதாக பார்க்கப்படும் துளசி, கொலஸ்ட்ரால் அளவை நிர்வகித்தல் உட்பட பல ஆயுர்வேத ஆரோக்கிய நன்மைகள் கொண்ட மருத்துவ மூலிகை ஆகும். தேநீரில் இந்த மூலிகையைச் சேர்க்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் துளசி ஊறவைத்த தண்ணீரை உட்கொள்ளலாம்.  இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

4 /7

இந்திய சமையல்களில் பரவலாக பயன்படுத்தப்படும் ஏலக்காய், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் சிறந்த மசாலாப் பொருளாகும். இந்த மசாலா LDL கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. சரியான விகிதத்தில் உட்கொள்ளும்போது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

5 /7

வெந்தயம், நார்ச்சத்து நிறைந்த அற்புதமான விதைகளான வெந்தயம் மற்றும் அதன் கீரையும் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைப்பதில் சிறப்பாக செயலாற்றுகின்றன. வெந்தயத்தை உணவில் மசாலாப் பொருளாக பயன்படுத்தலாம் அல்லது வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம். அதேபோல, வெந்தயக்கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படும்

6 /7

ஒரு சிறந்த ஆயுர்வேத மூலிகையான இஞ்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிரம்பியுள்ளது. இந்த மூலிகையை உங்கள் வழக்கமான உணவுகளிலும், சூப்பிலும் சேர்க்கலாம். தினசரி உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்ள தேநீரில் இஞ்சி சேர்த்து அருந்துவது சுலபமான வழி.

7 /7

இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்த இலவங்கப்பட்டையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. வீக்கத்தை திறம்பட கட்டுப்படுத்த உதவும். இரத்த லிப்பிட் அளவை மேம்படுத்துகிறது, இதனால் எல்டிஎல் கொழுப்ப்பு குறைகிறது.