Uric Acid: சிறுநீரகத்தை சின்னாபின்னப்படுத்தும் யூரிக் அமிலத்திற்கு ‘செக்’ வைக்கும் பழங்கள்

Stone in Kidney: யூரிக் அமிலம் உடலில் அதிகரித்தால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். அது மட்டுமல்லாமல், எலும்புகள் மற்றும் மூட்டுகளில் படியும் யூரிக் அமிலம் உடல்நலத்தை சீர்கெடுத்துவிடும். உணவில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொண்டால் யூரிக் அமில உற்பத்தி குறையும். 

சிறுநீரகத்தில் உற்பத்தியாகும் யூரிக் அமிலத்தின் அளவு குறைந்தால், கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. அதற்கு இந்தப் பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

1 /7

நாம் உண்ணும் சில உணவுகளில் பியூரின்கள் காணப்படுகின்றன. இரத்தம் சுத்தீகரிக்கப்படும்போது உருவாகும் யூரிக் அமிலம் சிறுநீரகங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த அழுக்குப் பொருள் வெளியே வர முடியாத போது, ​​அது படிகங்களாக மாறி மூட்டுகளில் படிகிறது

2 /7

உடலில் கீல்வாதம் என்னும் மூட்டு பிரச்சனையை ஏற்படுத்தும் யூரிக் அமிலம், சிறுநீரகத்தில் கற்களை உருவாக்குகின்றன. யூரிக் அமிலத்தை குறைக்க, உங்கள் உணவில் வைட்டமின் சி அளவை அதிகரிக்கலாம்.

3 /7

சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டி உடலில் இருந்து சிறுநீர் மூலம் வெளியேற்றும். ஆனால் சில நேரங்களில் உடலில் யூரிக் அமிலம் அதிக அளவு உடலில் தங்கிவிடுகிறது. இது பல உடல் நலக் குறைவுகளை ஏற்படுத்தும்.

4 /7

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தத் தேவையான புரதச்சத்து, அத்தியாவசியமான அமிலங்கள் மற்றும் வைட்டமின்களும் தாது சத்துகளும் வாழைப்பழத்தில் இருக்கிறது.வாழைப்பழத்தில்   இரும்பு, துத்தநாகம், வைட்டமின் A, செலினியம் மற்றும் புரதம். இது மேலும், ஓர் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான மேலும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் வழங்குகிறது.

5 /7

திராட்சையில் பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் K, வைட்டமின் C மற்றும் வைட்டமின் B9 போன்ற சத்துக்களும் உள்ளன. எனவே இது யூரிக் அமிலத்தை திறம்பாட நிர்வகிக்கிறது

6 /7

கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. கொய்யா நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகவும் உள்ளது. நார்ச்சத்து கொண்ட கொய்யா, உடலில் அழுக்கள் தேங்குவதைத் தடுப்பதுடன், யூரிக் அமிலத்தையும் கட்டுப்படுத்துகிறது

7 /7

ஆரஞ்சு பழத்தில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது. ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியினை  அதிகரிக்கும். மேலும், புரதம், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இவை யூரிக் அமிலத்தைக் குறைக்கும்