யூரிக் அமிலத்தால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் முருங்கை என்னும் சூப்பர்ஃபுட்

Natural leaves to lower uric acid: மூட்டுகளில் படிந்துள்ள யூரிக் அமிலத்தை உடலில் இருந்து வெளியேற்ற அருமையான ஆனால் சுலபமான வழி... முருங்க இலைகளை வெதுவெதுப்பான நீரில் மென்று சாப்பிட இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

முருங்கைக்காய், முருங்கை இலை என முருங்கையின் அனைத்து பாகங்களும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதை நாம் அறிவோம். புரதம், வைட்டமின் B6, வைட்டமின் சி, இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின் (B2), வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), மெக்னீசியம் என பல ஊட்டச்சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன

1 /7

ஆரோக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பயோஆக்டிவ் தாவர கலவைகள் என ஊட்டச்சத்து சுரங்கத்தை கொண்டுள்ள முருங்கையின் ஆரோக்கிய பண்புகள், பல நோய்களை போக்கும் என்றால், புதியதாக நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்

2 /7

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த முருங்கை கீல்வாதம் மற்றும் மூட்டு வலி உள்ளவர்களுக்கு நல்லது.

3 /7

எலும்புகளில் படியும் யூரிக் அமில படிகங்கள் வலியை ஏற்படுத்துகின்றன. இந்த படிகங்கள் எலும்புகளில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துதி மூட்டுவலி வலியை ஏற்படுத்துகிறது. குளிர்காலத்தில் இந்தப் பிரச்சனை மேலும் அதிகரிக்கும் என்பதால், அதிக எச்சரிக்கைத் தேவைப்படுகிறது

4 /7

முருங்கையில் ஹைப்பர்யூரிசெமிக் எதிர்ப்பு கூறுகள் காணப்படுகின்றன, இது உடலின் சீரம் யூரிக் அமில அளவு மற்றும் கிரியேட்டினின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதுமட்டுமல்ல, முருங்கையில் உள்ள சாந்தைன் ஆக்சிடேஸ் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களும் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும்.

5 /7

யூரிக் அமிலம் மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளையும் கொடுக்கும் முருங்கையில். வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை காணப்படுகின்றன, அவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக செயல்படுகின்றன. மேலும், முருங்கை இலைகளில் குர்செடின் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகளை போக்க முருங்கை இலைகளை சாப்பிடலாம். 

6 /7

யூரிக் அமில அளவைக் குறைக்க முருங்கை இலையை எப்போது வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். ஆனால் காலையில் வெதுவெதுப்பான நீரில் வெறும் வயிற்றில் 10 முருங்கை இலைகளை மென்று சாப்பிடுங்கள். ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்திய பிறகு மூட்டு வலி குறைவதை தெரிந்துக் கொள்ளலாம் 

7 /7

யூரிக் அமிலத்திற்கான வீட்டு வைத்தியத்தை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், இதைப் பற்றி நீங்கள் நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். யூரிக் அமிலத்திற்கு சிகிச்சையளிக்க மருத்துவர் ஏதேனும் மருந்துகளை பரிந்துரைத்திருந்தால், அவற்றை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.