மலச்சிக்கலுக்கு மரண அடி கொடுக்கும் சூப்பர் டிரிங்க்! பல சிக்கல்களை போக்கும் பானம்!

Powerful Drink For Constipation Cure : மலச்சிக்கல் ஏற்பட்டால் மனநிலையிலும் சிடுசிடுப்புத் தன்மை கூடிவிடும். இந்தப் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களின் வேதனை அவர்களுக்குத் தான் தெரியும். ஆனால், மலச்சிக்கல் என்ற இறுக்கத்தில் இருந்து விடுபட சுலபமான வீட்டு வைத்திய முறைகள் உண்டு...  

மருந்துகள் இல்லாமல் வீட்டிலேயே மலச்சிக்கலைப்போக்க பல்வேறு வீட்டு வைத்தியங்கள் இருந்தாலும், சக்தி மிக்க எலுமிச்சையின் தாக்கம், மலச்சிக்கலை இளக்கிவிடும். வயிற்றில் உள்ள கழிவுகளை திறம்பட வெளியேற்றி குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அற்புதமான பானம் இது...

1 /8

நாள்பட்ட மலச்சிக்கல் என்பது வாழ்க்கையை கடினமாக்கிவிடும். வெளியில் செல்வதற்கு தயக்கம், உணவு உண்ண பிடிக்காதது, மனநிலையில் இறுக்கம், என மலச்சிக்கல் ஏற்படுத்தும் வாழ்க்கைமுறை பிரச்சனைஅக்ள் ஏராளம்.  ,

2 /8

மலச்சிக்கல் இருந்தால், உண்ணும் உணவு செரிமானம் ஆவதிலும் பிரச்சனை ஏற்படுகிறது. குடலை சுத்தமாகவும் வலுவாகவும் வைத்திருப்பதற்கு வீட்டு வைத்தியங்கள் பல உள்ளன. அதேபோல மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், மருத்துவர்களை அணுகி மருந்துகள் எடுத்துக் கொண்டால், அந்த மருந்துகளின் பக்க விளைவு ஒருபுறம் என்றால், இயல்பாகவே மலம் இளகும் தன்மையும் பாதிக்கப்படும்  

3 /8

நாள்பட்ட மலச்சிக்கல் குடலில் அழுக்குகள் சேர காரணமாகிவிடும். இது மலச்சிக்கலில் இருந்து வேறுபல பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும். எனவே மலச்சிக்கலை சாதாரணமானதாக எடைபோட வேண்டாம்

4 /8

ஆனால், தீவிர மலச்சிக்கல் பிரச்சனையையும் 15 நாட்களில் குணமாக்கும் அற்புதமான ஒரு பானத்தை வீட்டிலேயே தயாரித்து தொடர்ந்து பருகி வந்தால் மலச்சிக்கலுக்கு, நீங்களே சிக்கல் ஏற்படுத்தலாம்

5 /8

எலுமிச்சை நீர் ஆகச்சிறந்த அருமருந்து. அதிலும் மலச்சிக்கலை போக்குவதற்கு எலுமிச்சையைப் போல் சக்திவாய்ந்த பானம் எதுவும் இல்லை

6 /8

எலுமிச்சையை பிழிந்து அதில்வ்ந்நீர் மற்றும் கருப்பு உப்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால், பதினைந்தே நாட்களில் மலச்சிக்கல் பிரச்சனை காணாமல் போய்விடும். குடலும் சுத்தமாகிவிடும்

7 /8

காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்க்க நல்ல வழியாகும். அதிலும் நார்ச்சத்து அதிகமான காய்கறிகளை தினசரி அடிப்படையில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிலும் பழங்களை அப்படியே சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

8 /8

பழரசங்கள் மற்றும் நீர் அதிகமாக உள்ள நீராகாரங்கள் மலச்சிக்கல் ஏற்படமால் தவிர்க்கும் நல்ல வழியாகும்