மூளை, நரம்புகளை வலுப்படுத்தும் கசகசா.. சாப்பிடும் சரியான முறை!

கசகசா என்னும் மசாலாவின் மருத்துவ குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். கசகசாவை சாப்பிடுவதால், மூளை ஆரோக்கியம் மேம்படும் என்றும் நரம்பு தளர்ச்சி முதல் இதய நோய்கள்  வரை பல்வேறு வகையான உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கால்சியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி6 மற்றும் ஈ, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ள கசகசா பல நோய்களில் இருந்து நம்மை காக்கும்.

1 /8

கசகசா மூளைக்குச் செல்லும் நரம்பு செல்களை தூண்டி, மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்க கசகசாவை பாலில் கொதிக்க வைத்து கொடுப்பது நல்ல பலன் அளிக்கும். 

2 /8

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள், கசகசா பாலை அருந்துவதால், நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள் ஏனெனில் இதில், நரம்புகளை வலுப்படுத்து ஆற்றல் உள்ளது.

3 /8

கசகசாவில் அதிக அளவிலான கால்சியம் மற்றும் தாமிர சத்து எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவற்றை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். 

4 /8

மன அழுத்தத்தை குறைத்து,  மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் கொண்ட கசகசா, தூக்கமின்மை பிரச்சனையை போக்கும். இரவில் கசகசா பல அருந்துவதால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

5 /8

கசகசாவில் இரும்புச் சத்தும் நிறைந்துள்ள நிலையில், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனால் இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். 

6 /8

தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய ஜிங்க் என்னும் துத்தநாக சத்து மிகவும் முக்கியம். எனவே, தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் துத்தநாகம் நிறைந்த கசகசாவை உட்கொள்ளவது பலன் தரும்.

7 /8

கசகசாவின் மருத்துவ பலன்களை முழுமையாக பெற, இரவில் பாலில் அரைத்து, கொதிக்க வைத்த கசகசாவை சாப்பிடுவது சிறந்தது என்கின்றனர் ஆரோக்கிய நிபுணர்கள்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.