தொப்பை கொழுப்பை குறைக்கணுமா? கறிவேப்பிலை இருக்க கவலை ஏன்?

Curry Leaves To Reduce Belly Fat: உடல் எடையை குறைப்பதில் பல வீட்டு பானங்கள், மசாலாக்கள் மற்றும் மூலிகைகள் பயனுள்ளதாக கருதப்படுகின்றன. சமையலறையில் நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் சில இலைகளை சரியாகப் பயன்படுத்தினால் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

ரசம், சாம்பார், துவையல், தாளிக்க என பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்க பயன்படுகிறது. ஆனால் இதில் பல மருத்துவ குணங்களும் உள்ளன என்பது பலருக்கு தெரிவதில்லை. இது பிடிவாதமான தொப்பையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொப்பை கொழுப்பை குறைக்க கறிவேப்பிலை எவ்வாறு பயன்படுகிறது என இந்த பதிவில் காணலாம். 

1 /8

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் ஈ ஆகியவற்றுடன் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் இதில் அதிக அளவு தாமிரம், இரும்பு மற்றும் நார்ச்சத்து உள்ளது.

2 /8

கறிவேப்பிலை உடல் எடையை குறைக்க உதவும். கறிவேப்பிலை செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகிறது.

3 /8

கறிவேப்பிலை வயிற்றுக்கு குளிர்ச்சி தருகிறது. மேலும் இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, தொப்பையில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்கிறது. இதன் மூலம் இது தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையையும் குறைக்கிறது.

4 /8

கறிவேப்பிலை கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. உடல் பருமன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கறிவேப்பிலையில் உள்ளன. அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதை தினமும் உட்கொள்ளலாம்.  

5 /8

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் கறிவேப்பிலை பயனுள்ளதாக இருக்கும். இதில் சர்க்கரை அளவை குறைக்கும் குணங்கள் உள்ளன. இது நீரிழிவு நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

6 /8

வெறும் வயிற்றில் 3-4 கறிவேப்பிலையை மென்று சாப்பிடவும். தொப்பை கொழுப்பை குறைக்க இதன் சாற்றையும் அருந்தலாம். இதற்கு, தண்ணீரில் 10-15 கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் வடிகட்டி, அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும்.

7 /8

கறிவேப்பிலை டீ: அதிக நன்மைகள் பெற கறிவேப்பிலை டீயும் செய்யலாம். இதற்கு 10-15 கறிவேப்பிலை மற்றும் ஒரு சிறிய துண்டு இஞ்சியை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். பின் வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சேர்த்து குடிக்கவும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.