அடாவடி கொழுப்பை அதிரடியாய் அகற்றும் 5 பச்சை இலைகள்

Home Remedies For High Cholesterol: இன்றைய காலகட்டத்தில் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. கொலஸ்ட்ரால் என்பது ஒரு வகை கொழுப்பாகும். இது உடலில் செல்கள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்க உதவுகிறது. 

ஆனால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கத் தொடங்கும் போது, ​​பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் பாதுகாப்பான அளவு வயதுக்கு ஏற்ப மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். இதை கட்டுப்படுத்த உதவும் 5 பச்சை இலைகளை பற்றி இங்கே காணலாம்.

 

1 /7

மோசமான வாழ்க்கை முறை காரணமாக உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த இயற்கையான சில வழிகளும் உள்ளன, நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில இலை வகைகளை கொண்டே கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கலாம்.

2 /7

கறிவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் அதிகம் உள்ளன. 

3 /7

கொத்தமல்லி சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இது உணவின் சுவையை மேம்படுத்துவதோடு, ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையை எளிதாக குணப்படுத்தலாம்.

4 /7

கொலஸ்ட்ராலைக் குறைக்க நாவல் பழ இலைகள் மிகவும் உதவியாக இருக்கும். இதில் ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் அந்தோசயனின் போன்ற பண்புகள் உள்ளன. இது நரம்புகளில் குவிந்துள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

5 /7

வெந்தய இலை அதாவது வெந்தய கீரையில் உள்ள மருத்துவ குணங்கள், உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் ஆரோக்கியமான அளவுகளுடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த இதை தினமும் உட்கொள்ளலாம்.  

6 /7

கொழுப்பின் அளவை குறைப்பதில் துளசி இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள பண்புகள் வளர்சிதை மாற்ற அழுத்தத்தைக் குறைக்கின்றன. இது உடல் எடை மற்றும் கொழுப்பைப் பராமரிக்க உதவுகிறது.  

7 /7

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.