விரைவில் மூடப்படும் சென்னையின் பிரபல திரையரங்கம்! ரசிகர்கள் சோகம்!

Chennai udhayam theater: சென்னை அசோக் நகரில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த உதயம் தியேட்டர் விரைவில் மூடப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

 

1 /5

சென்னையின் மிகவும் பிரபலமான திரையரங்காக இருந்து வந்தது உதயம் தியேட்டர். அசோக் நகரில் இயங்கி வரும் இந்த தியேட்டரில் மொத்தம் ஐந்து திரைகள் உள்ளது.  

2 /5

சென்னையில் வாழும் நடுத்தர குடும்பத்தினர் குறைந்த விலையில் படம் பார்த்துவிட்டு வீடு திரும்ப ஏற்ற திரையரங்கமாக இருந்து வந்தது. ஏனெனில் இங்கு பார்க்கிங், உணவுகள் குறைந்த விலையில் கிடைக்கும்.  

3 /5

இந்நிலையில் தற்போது மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், ஓடிடி தளங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாலும் திரையரங்கிற்கு வரும் மக்களின் கூட்டம் குறைந்து வருகிறது.  

4 /5

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன, இந்நிலையில் உதயம் தியேட்டர் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது.  

5 /5

ஒரு பிரபல தனியார் நிறுவனம் இந்த இடத்தை வாங்கி உள்ளதாகவும், இங்கு வணிக வளாகம் அல்லது பிளாட்டுகள் கட்ட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.