ஜிம் போகாமலேயே ஜம்முனு தொப்பை கொழுப்பு குறையும்: இந்த ஜூஸ் குடிங்க போதும்

Weight Loss Juices: துரித உணவுகள், அதிக கொழுப்பு, எண்ணெய் உள்ள உணவுகள், செயல்பாடற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாக பலருக்கு தொப்பை கொழுப்பு மிக வேகமாக அதிகமாகி விடுகின்றது. ஆனால் இதைக் குறைப்பது பிரம்ம பிரயத்னமாக இருக்கின்றது.

Weight Loss Juices: தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க பலர் பலவித முயற்சிகளை எடுக்கிறார்கள். எனினும் பெரிய வித்தியாசம் எதுவும் வருவதில்லை. சொல்லப்போனால் சில முயற்சிகளால் பல பக்க விளைவுகளே ஏற்படுகின்றன. எனினும் சில எளிய இயற்கையான வழிகளிலும் தொப்பை கொழுப்பை குறைக்கலாம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத அப்படி ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /8

உடல் பருமன் இந்நாட்களில் பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சினையாக உள்ளது. உடல் எடையை குறைக்க சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், இவற்றாலும் அனைவருக்கும் தீர்வு கிடைப்பதில்லை.

2 /8

சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தொப்பை கொழுப்பை குறைத்து, உடல் எடையையும் குறைக்கும் (Weight Loss) வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.  

3 /8

ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உடலை பாதுகாக்க உதவுகின்றன. இதைத்தவிர இதில் வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவையும் உள்ளன. காலையில் ஆரஞ்சு சாறு குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைப்பதோடு வயிற்றுக்கு நிரம்பிய உணர்வும் கிடைப்பதால், தேவையற்ற உணவுகளை நாம் உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.  

4 /8

பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ள தக்காளி சாறு உடல் ஆரோக்கியத்திற்கு பலவித நன்மைகளை அளிக்கும் ஒரு சாறாகும். சர்க்கரை சேர்க்காமல் இதை உட்கொண்டால் சில நாட்களில் தொப்பை கொழுப்பு குறைவதோடு உடல் உப்பசமும் குறையும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

5 /8

வெள்ளரியில் நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. வெள்ளரி சாறு காலையில் உட்கொள்ள சிறந்த ஒரு பானமாக கருதப்படுகின்றது. இதில் உள்ள நீர்ச்சத்தின் காரணமாக வயிற்றுக்கு நிரம்பிய உணர்வு கிடைக்கின்றது. இது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்புடன் வைக்கின்றது.

6 /8

ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட்டின் கலவையான இந்த சாறு ஏபிசி சாறு என்று அழைக்கப்படுகின்றது. இந்த மூன்றையும் ஒன்றாக அரைத்து காலையில் உட்கொண்டால் அபரிமிதமான நன்மைகள் கிடைக்கும், கலோரிகள் வேகமாக எரியும், தொப்பை கொழுப்பு கரையும். இந்த சாரில் வைட்டமின் பி6, பீட்டா கரோட்டின், இரும்புச்சத்து மற்றும் இன்னும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் உள்ளன.

7 /8

தினமும் காலையில் கீரை சாறு அல்லது கீரை சூப் உட்கொண்டால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கின்றன. இது உடலில் ஆண்டிபாடி உற்பத்தி ஆவதை அதிகரிக்கிறது. செரிமான சக்தியை சீராக்கி, கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கும் இது தீர்வாக அமைகின்றது. தினமும் இதை உட்கொண்டால் சில நாட்களில் வயிற்று தொப்பை குறையத் தொடங்கும்.

8 /8

அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.