நடிகை லைலாவின் மகன்களை பார்த்து இருக்கிறீர்களா? வெளியான புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான லைலா அன்னையர் தினத்தில் தனது இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

1 /5

நடிகை லைலா 1990க்கு பிந்தைய காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.   

2 /5

அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார் லைலா. தீனா, தில், முதல்வன், உன்னை நினைத்து, பிதாமகன் என தொடர்ந்து இவர் நடித்த படங்கள் ஹிட் ஆனது.  

3 /5

2006ம் ஆண்டு முதல் சினிமாவில் இருந்து படிப்படியாக விலகி, ஒரு கட்டத்தில் முற்றிலும் விலகினார். இந்நிலையில் லைலா வதந்தி என்ற வெப் சீரியசிலும், கார்த்தி நடித்த சர்தார் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க துவங்கினார்.   

4 /5

தற்போது விஜய்யின் GOAT படத்திலும், ஆதி நடிக்கும் சப்தம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.   

5 /5

இந்நிலையில், அன்னையர் தினத்தில் தனது மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் லைலா.  இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.