சுந்தர்.சி-யின் அரண்மனை 4 படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகல்?

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள அரண்மனை-4 படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகிவிட்டதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 19, 2023, 03:36 PM IST
  • விஜய் சேதுபதி அரண்மனை-4 படத்திலிருந்து விலகியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
  • அரண்மனை-4 படத்தில் வேறு நடிகரை நடிக்கவைக்கும் முயற்சியில் சுந்தர்.சி இறங்கியுள்ளார்.
  • ஆர்யா மற்றும் விஷாலை வைத்து சுந்தர்.சி 'சங்கமித்ரா' படத்தை இயக்கவுள்ளார்.
சுந்தர்.சி-யின் அரண்மனை 4 படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகல்? title=

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே பெரும் புகழை அடைந்தவர்களுள் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர்.  விஜய் சேதுபதி இல்லாத படங்களே இல்லை என்று கூட சொல்லலாம், அந்த அளவிற்கு விஜய் சேதுபதிக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றது.  மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்போடு போற்றப்படும் இவர் கதாநாயகன், வில்லன் என பல பரிமாணங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார்.  மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது, கதாநாயகனாக நடிக்கும்போது இவருக்கு ரசிகர்களிடம் எவ்வளவு வரவேற்பு கிடைக்கிறதோ அதைவிட அதிகமாக வில்லனாக நடிக்கும்போது கிடைக்கிறது.  சமீபத்தில் அமேசான் ப்ரைமில் ஒளிப்பரப்பான பார்ஸி வெப் தொடரில் ஷாஹித் கபூருடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார்.  பல மொழி படங்கள் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்து திரையுலகில் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க | தனுஷின் 'வாத்தி' முதல் நாள் வசூல்: வேட்டையாடியதா... கோட்டைவிட்டதா...

இதற்கிடையில் தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ஹாரர் காமெடி திரைப்படமான அரண்மனை படத்தின் மூன்று பாகங்களும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் படத்தின் நான்காவது பாகத்தை எடுக்கும் முயற்சியில் இயக்குனர் இறங்கியுள்ளார்.  அரண்மனை-4 படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்னர் செய்திகள் வெளியானது.  இந்த செய்தியினை உறுதிப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் விஜய் சேதுபதி, சந்தானம் மற்றும் சுந்தர்.சி ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது, இதற்கான காரணம் என்னவென்பது குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியிருப்பதால் இயக்குநர் சுந்தர்.சி 'அரண்மனை-4' படத்தில் நடிக்க வைக்க மற்றொரு பிரபல நடிகரை தேடும் முயற்சியில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் வெளியாகியுள்ள சில தகவல்களின்படி இயக்குனர் சுந்தர்.சி நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷாலை வைத்து தனது 'சங்கமித்ரா' படத்தை புதுப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பகாசூரன் பாக்ஸ் ஆஃபீஸ்: மோகன் ஜியின் படங்களில் இதுவரை இல்லாத முதல்நாள் வசூல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News