அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப் இணைந்து நடிக்கும் புதிய அதிரடி ஆக்ஸர் திரில்லர்!

'படே மியான் சோட் மியான்' படக்குழு த்ரில் மற்றும் ஆக்சன் நிறைந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.  பாலிவுட்டின் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோக்களான அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Feb 10, 2024, 03:13 PM IST
  • ஆக்சன் த்ரில்லராக உருவாகும் படே மியான் சோட் மியான்!
  • இந்த படத்தில் இருந்து மேக்கிங் வீடியோ வெளியானது.
  • ஹாலிவுட் பட பாணியில் உருவாக்கப்பட்டு வருகிறது.
அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப் இணைந்து நடிக்கும் புதிய அதிரடி  ஆக்ஸர் திரில்லர்! title=

‘படே மியான் சோட் மியான்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு ‘மேக்கிங் ஆஃப் ரியல் ஆக்‌ஷன் ஃபிலிம்’ வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.  பாலிவுட் முக்கிய இயக்குனரான அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள இப்படத்தில், பாலிவுட்டின் இரண்டு பெரிய ஆக்‌ஷன் நட்சத்திரங்களான அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த வீடியோ சுவாரஸ்யமான ஆக்‌ஷன் காட்சிகள் எப்படி உருவாகிறது என்பதை நமக்கு காட்டுகிறது.  மேலும் படத்திற்கு பின்னால் எவ்வளவு பேரின் உழைப்பு உள்ளது என்பதை புரிய வைக்கிறது.  

மேலும் படிக்க | Actress Keerthy Suresh Net Worth: அடேங்கப்பா.. கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இயக்குனர் அலி அப்பாஸ் ஜாஃபர் கூறுகையில், “பெரிய ஆக்ஷன் படங்களை எடுப்பதில் ஏன் உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் என்று, மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள், அதற்கு என்னிடம் பதில் இல்லை. நான் இதற்கு எப்போதும் இது பயப்படுவதற்கான உள்ளுணர்வு, சாத்தியமற்ற ஒன்றை அடைய முயற்சிக்கும் உள்ளுணர்வு! இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை மிகவும் தத்ரூபமாக எடுத்துள்ளோம். மேலும் படத்தில் நிறைய சர்பிரைஸ் ரசிகர்களுக்கு உள்ளது, இது ஆக்‌ஷன் பிரியர்களுக்கு விருந்தாக இருக்கும்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி கூறுகையில், "படே மியான் சோட் மியான் படத்தில் இரண்டு பெரிய ஆக்ஷன் நட்சத்திரங்களான அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர், மேலும் ஆக்‌ஷன் காட்சிகள் பார்ப்பதற்கு ரியல் ஆக இருக்க வேண்டும் நோக்கத்தில் படமாக்கினோம். இது உண்மையிலேயே நம்பக்கூடியதாக தெரிகிறது" என்று கூறினார். இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் வாசு பாக்னானி கூறுகையில், “இயக்குனர் அலி அப்பாஸ் ஜாஃபர் ஏற்கனவே எல்லாத்தையும் சொல்லியிருக்கார், குறைந்த பட்சம் விஎஃப்எக்ஸ் எல்லாம் நிஜமாக்க வேண்டும் என்று எண்ணினோம். ரொம்ப பதட்டமாக இருந்தது, இன்றைய காலக்கட்டத்தில் இவ்வளவு பெரிய ஆக்ஷன் படத்தை எப்படி எடுப்பது என்று நினைத்தோம்" என்று கூறினார்.

மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்ட இப்படம், ஹாலிவுட் பிளாக்பஸ்டர்களை நினைவூட்டும் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை அளிக்கிறது. இந்த பான்-இந்தியா திரைப்படம் அதன் பெரிய அளவிலான மற்றும் ஹாலிவுட் பாணி சினிமா காட்சிகளுக்காக சலசலப்பை உருவாக்குகிறது. இந்த படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் மற்றும் அலயா எஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘படே மியான் சோட் மியான்’ படம் வெளியாக உள்ளது.  இப்படம் நிச்சயம் அனைத்து வயது ரசிகர்களையும் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  வாசு பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் ஆகியோர் படே மியான் சோட் மியானை இணைந்து வழங்குகிறார்கள். அலி அப்பாஸ் ஜாஃபர் எழுதி இயக்க வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், ஜாக்கி பாக்னானி, ஹிமான்ஷு கிஷன் மெஹ்ரா, அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஈத் ஏப்ரல் 2024 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் படிக்க | Rio Raj: மனைவிக்காக ஸ்பெஷல் போட்டோக்களை பதிவிட்ட ரியோ! வைரலாகும் புகைப்படங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News