Best Thriller Movies: சிறந்த டாப் 5 பாலிவுட் சூப்பர் ஹிட் திரில்லர் படங்கள்!

Best Bollywood Thriller Movies: த்ரிஷ்யம், ஜானே ஜான், ராசி என பாலிவுட்டில் பல திரில்லர் படங்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளன.    

Written by - RK Spark | Last Updated : Dec 18, 2023, 08:33 AM IST
  • திரில்லர் படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும்.
  • பாலிவுட்டில் பல திரில்லர் படங்கள் ஹிட் அடித்துள்ளன.
  • அந்தாதுன் படம் தேசிய விருதையும் வென்றது.
Best Thriller Movies: சிறந்த டாப் 5 பாலிவுட் சூப்பர் ஹிட் திரில்லர் படங்கள்!  title=

நீங்கள் பாலிவுட் படங்களின் ரசிகராக இருந்தால் பல காதல், குடும்ப திரைப்படங்களை பார்த்து இருப்பீர்கள். உங்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் சிறந்த பாலிவுட் திரில்லர் படங்களை பற்றி பார்ப்போம். 

ஜானே ஜான்(Jaane Jaan) 2023

ஜானே ஜான் திரைப்படம் கெய்கோ ஹிகாஷினோ எழுதிய சஸ்பெக்ட் எக்ஸ் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.  கரீனா கபூர் நடித்த முதல் OTT படம் இது ஆகும்.  சுஜோய் கோஷ் இயக்கத்தில்  சிறந்த சுஜாய் கோஷ், கீகோ ஹிகாஷினோ மற்றும் ராஜ் வசந்த் திரைக்கதையில் உருவான இந்த திரில்லர் படம் பலரையும் ஈர்த்தது.  ஒரு திறமையான கணித ஆசிரியர் அவளது பக்கத்து வீட்டுக்காரரை கொலை வழக்கில் இருந்து எப்படி தப்பிக்க வைக்கிறார் என்பதே கதை.  இந்த படத்தில் கரீனா கபூர், ஜெய்தீப் அஹ்லாவத், விஜய் வர்மா, சவுரப் சச்தேவா, லின் லைஷ்ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.  நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் படத்தை பார்க்கலாம்.

மேலும் படிக்க | யோகி பாபு நடித்துள்ள போட் படத்தின் டீஸர் வெளியாகி வைரல்

சோர் நிகல் கே பாகா (Chor Nikal Ke Bhaga) 2023

இந்த ஆண்டு வெளியான சிறந்த திரில்லர் படங்களில் சோர் நிகல் கே பாகாவும் ஒன்று.  ஒருவரை தனது இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் பல ஆச்சரியங்களை படம் வழங்குகிறது. அஜய் சிங் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் யாமி கௌதம், சன்னி கௌஷல், ஷரத் கேல்கர், இந்திரனீல் சென்குப்தா, பருண் சந்தா, க்ருனால் பண்டிட் ஆகியோர் நடித்துள்ளனர்.  நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் படத்தை பார்க்கலாம்.

ஹசீன் தில்ருபா (Haseen Dillruba) 2021

நீங்கள் ஒரு சிறந்த பாலிவுட் த்ரில்லர் படத்தை பார்க்க விரும்பினால் டாப்ஸி பன்னு நடித்துள்ள ஹசீன் தில்ருபா படத்தை பார்க்கலாம். இந்த உளவியல் த்ரில்லர் பல சஸ்பென்ஸ்களை கொண்டுள்ளது.  கணவனின் கொலையில் சந்தேகப்படும்படியாக விசாரிக்கப்படும் ஒரு பெண்ணைச் சுற்றி கதைக்களம் நகர்கிறது. மேலும் கிளைமாக்ஸ் உண்மையிலேயே உங்களை வியக்க வைக்கும். வினில் மேத்யூ இயக்கத்தில் இந்த படத்தில் டாப்ஸி பண்ணு, விக்ராந்த் மாஸ்ஸி, ஹர்ஷ்வர்தன் ரானே, ஆதித்யா ஸ்ரீவஸ்தவ், யாமினி தாஸ், தயாசங்கர் பாண்டே, ஆஷிஷ் வர்மா, அதுல் திவாரி ஆகியோர் நடித்துள்ளனர். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் படத்தை பார்க்கலாம்.

ராசி (Raazi) 2018

ஆலியா பட் நடித்துள்ள ராசி படமும் நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ஒன்றாகும்.  இந்த படம் தேசபக்தி உணர்வை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், பல திரில்லர் காட்சிகளை கொண்டுள்ளது.  மேக்னா குல்சார் இயக்கி உள்ள இந்த படத்தில் ஆலியா பட், விக்கி கௌஷல், ரஜித் கபூர், ஷிஷிர் சர்மா, ஜெய்தீப் அஹ்லாவத், சோனி ரஸ்தான், அம்ருதா கான்வில்கர், கன்வால்ஜீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.  அமேசான் பிரைம் தளத்தில் படத்தை பார்க்கலாம்.

அந்தாதுன் (Andhadhun) 2018

ஆயுஷ்மான் குரானா நடித்த அந்தாதுன் படம் பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகளை பெற்றது. இந்த படம் பாலிவுட் த்ரில்லர் திரைப்படங்களில் முதன்மையானது. அரிஜித் பிஸ்வாஸ், யோகேஷ் சண்டேகர் மற்றும் ஸ்ரீராம் ராகவன் எழுத்தில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் தபு, ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, அனில் தவான், மானவ் விஜ், ஜாகீர் உசேன், அஷ்வினி கல்சேகர் ஆகியோர் நடித்துள்ளனர்.  நெட்ஃபிலிக்ஸ், யூடியூப் தளத்தில் படத்தை பார்க்கலாம்.

மேலும் படிக்க | பிக்பாஸை தொகுத்து வழங்க கமல் வாங்கும் சம்பளம்! அடேங்கப்பா..இத்தனை கோடியா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News