பிரபல மலையாள இயக்குனர் படத்தில் சூர்யா? உற்சாகத்தில் ரசிகர்கள்!

இயக்குனர் லிஜோ ஜோஸ் சூர்யாவை வைத்து படம் இயக்க விரும்பியதாகவும், அதற்கான கதையை சூர்யாவிடம் தெரிவித்து இருப்பதாகவும், நடிகரின் இறுதி ஒப்புதலுக்காக இயக்குனர் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Jan 22, 2023, 09:22 AM IST
  • மலையாள இயக்குனர் படத்தில் சூர்யா.
  • தற்போது சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.
  • இந்த ஆண்டு படம் வெளியாக உள்ளது.
பிரபல மலையாள இயக்குனர் படத்தில் சூர்யா? உற்சாகத்தில் ரசிகர்கள்!  title=

மலையாள திரையுலகின் பிரபல இயக்குனரான லிஜோ ஜோஸ் பெல்லிசெரி தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான சூர்யா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து படம் இயக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் லிஜோ ஜோஸ் 2019ம் ஆண்டு வெளியான 'ஜல்லிக்கட்டு' படத்தின் மூலமாக மேலும் பிரபலமாகி இருக்கிறார்.  இந்த படத்திற்கு மட்டுமின்றி இவர் தனது பல படைப்புகளுக்கும் கேரளா அரசின் மாநில விருதுகள் போன்ற பல விருதுகளை பெற்று இருக்கிறார்.  லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சுபமோன் போன்றவர்களது நடிப்பில் வெளியான 'ஜல்லிக்கட்டு' படம் இந்திய திரையுலகின் சார்பாக ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | சுந்தர் சி படத்தில் விஜய் சேதுபதி! கோலிவுட்டில் உருவாகும் புதிய கூட்டணி!

தற்போது இயக்குனர் லிஜோ ஜோஸ் சூர்யாவை வைத்து படம் இயக்க விரும்பியதாகவும், அதற்கான கதையை சூர்யாவிடம் தெரிவித்து இருப்பதாகவும், நடிகரின் இறுதி ஒப்புதலுக்காக இயக்குனர் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதுமட்டுமல்லாது சூர்யாவை தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க இயக்குனர் லிஜோ ஜோஸ் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த தகவலை இயக்குனர் லிஜோ ஜோஸுக்கு நெருக்கமான மற்றொரு பிரபலம் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  லிஜோவின் ஜல்லிக்கட்டு படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய சுப்ரீம் சுந்தர் இதுகுறித்து சமீபத்தில் பேட்டியொன்றை அளித்திருந்தார்.  

jijo

ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூறுகையில், இயக்குனர் லிஜோ, விஜய் சேதுபதியிடம் புதிய படத்திற்கான கதையை பற்றி தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார்.  மேலும் கூறுகையில், இயக்குனர் தற்போது படத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார், அதேபோல நடிகர்களும் படத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகின்றனர்.  இரு தரப்பினரும் தங்களது தற்போதைய பணிகளை முடித்ததும் புதிய படத்திற்கான திட்டத்தை பற்றி பேசுவார்கள் என்றும் நடிகர்கள் இருவரும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.  தற்போது இயக்குனர் மோகன்லாலை வைத்து  ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தை இயக்கி வருகிறார்.  அடுத்ததாக லிஜோ இயக்கத்தில் மம்முட்டி மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் நடித்துள்ள 'நண்பகல் நேரத்து மயக்கம்' படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க | Bigg Boss 6: புதிய முறையில் எவிக்டான நந்தினி... சூசமாக வின்னரை அறிவித்த பிக்பாஸ்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News