'ஏகே61' படத்தில் அஜித்துடன் இணையப்போகும் மற்றொரு முக்கியப்புள்ளி!

 'ஏகே61' படத்தில் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 13, 2022, 03:36 PM IST
  • அஜித் தற்போது ஏகே61 படத்தில் நடித்து வருகிறார்.
  • ஹைதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
  • இந்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டம்.
'ஏகே61' படத்தில் அஜித்துடன் இணையப்போகும் மற்றொரு முக்கியப்புள்ளி! title=

வலிமை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகி வரும் 'ஏகே61' படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  வலிமை படம் வெளியாவதற்கு முன் ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக இருந்தார்களோ அதேபோல இந்த படத்திற்கும் ரசிகர்கள் அதிக ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.  பே வியூ ப்ராஜெக்ட்ஸ் பேனரின் கீழ் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார், வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்திற்கு சென்னையின் அண்ணாசாலை போன்று செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

Ajith

மேலும் படிக்க | டான் ஹீரோவா? வில்லனா? திரைவிமர்சனம்!

'அசுரன்' படத்தின் மூலம் பிரபலமான மஞ்சு வாரியார் இந்த படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியானது.  மேலும் இப்படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  2008ம் ஆண்டு வெளியான 'வாரணம் ஆயிரம்' படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வீரா என்பவர் தற்போது 'ஏகே61' படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.  இவர் ஏற்கனவே நடுநிசி நாய்கள் மற்றும் 2015ல் வெளியான ராஜதந்திரம் படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

samu

மேலும் பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  பல பிளாக்பஸ்டர் படங்களில் சமுத்திரக்கனி நடித்து இருக்கிறார், தற்போது அஜித்துடன் இணைந்து 'ஏகே61' படத்தில் நடிக்கவிருக்கிறார்.   'ஏகே61' படத்தில் நடிகர் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.  சமுத்திரக்கனி சமீபத்தில் வினோதய சித்தம் என்ற படத்தை இயக்கி இருந்தார்.  மேலும், புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.  

மேலும் படிக்க | தோனி தயாரிப்பில் நயன்தாரா! மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News