10 மற்றும் +2ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தபால் துறையில் வேலைவாய்ப்பு!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தபால் அலுவலகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு இருக்கின்றது.  

Written by - RK Spark | Last Updated : Aug 25, 2022, 08:02 AM IST
  • 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தபால் துறையில் வேலைவாய்ப்பு.
  • வயது 18 முதல் 32 வரை இருக்க வேண்டும்.
  • மாநிலங்கள் வாரியாக மொத்தம் 98083 காலி பணியிடங்கள் உள்ளன.
10 மற்றும் +2ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தபால் துறையில் வேலைவாய்ப்பு! title=

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தபால் அலுவலகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு இருக்கின்றது.

1) நிறுவனம் :

இந்திய தபால் துறை 

2) வேலைவகை :

அரசு வேலை (நிரந்தரம்)

3) பணிகள் :

-MTS 

-Mail Guard

-Postman

மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு! ரயில்வே டிக்கெட்டிலும் மானியமா... அமைச்சர் வெளியிட்ட தகவல்!

4) கல்வித்தகுதிகள் :

- MTS மற்றும் Mail Guard பதவிகளுக்கு 10 அல்லது 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் கணினி அறிவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

- Postman பதவிக்கு 10 அல்லது 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

5) வயது வரம்பு :

மேற்கண்ட பணிகளுக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 32 வரை.

6) காலி பணியிடங்கள் :

மாநிலங்கள் வாரியாக மொத்தம் 98083 காலி பணியிடங்கள் உள்ளன.

MTS - 37,539 பணியிடங்கள் 

Mail Guard - 1,445 பணியிடங்கள் 

Postman - 59,099 பணியிடங்கள் 

7) விண்ணப்பிக்கும் செயல்முறை :

தபால் அலுவலகத்தின் அதிகாரபூர்வ தளமான indiapost.gov.in/ தளத்திற்கு செல்லவும், அதில் MTS, Mail Guard அல்லது Postman எந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமோ அதனை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.  இப்போது நீங்கள் அதில் கேட்கும் உங்களது தனிப்பட்ட விவரங்கள், கல்வி, தகுதிகள் போன்றவற்றை நீங்கள் உள்ளிட்ட வேண்டும்.  இந்த செயல்முறையை முடித்த பின்னர் உங்களது சான்றிதழைகளை ஸ்கேன் செய்து புகைப்படம் மற்றும் கையெழுத்து போன்றவற்றையும் சேர்த்து பதிவேற்ற வேண்டும், இறுதியாக விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி நீங்கள் விண்ணப்பிக்கும் செயல்முறையை இறுதிசெய்யலாம்.

8) தேர்நதெடுக்கப்படும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வி தொகுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க | TNPSC Exam: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News