CAA சட்டத்தை செயல்படுத்தும் நாட்டின் முதல் மாநிலமாக உ.பி!

குடியுரிமை திருத்தச் சட்டத்தினை, தங்கள் மாநிலத்தில் அமுல்படுத்தும் தேவையான அகதிகள் பட்டியலினை உத்திர பிரதேச அரசு தயாரித்துள்ளது!

Last Updated : Jan 13, 2020, 06:18 PM IST
CAA சட்டத்தை செயல்படுத்தும் நாட்டின் முதல் மாநிலமாக உ.பி! title=

குடியுரிமை திருத்தச் சட்டத்தினை, தங்கள் மாநிலத்தில் அமுல்படுத்தும் தேவையான அகதிகள் பட்டியலினை உத்திர பிரதேச அரசு தயாரித்துள்ளது!

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அமல்படுத்தப்பட்ட நிலையில், உத்தரபிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு, மாநிலத்தின் 19 மாவட்டங்களில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத அகதிகளின் முதல் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த வழியில், அகதிகளின் பட்டியலைத் தயாரித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய நாட்டின் முதல் மாகாணமாகவும் உத்தரப்பிரதேசம் அறியப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம் இதுவரை மாநிலத்தின் 19 மாவட்டங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் முஸ்லிம் அல்லாத அகதிகளின் பட்டியலை சேகரித்துள்ளது. மற்ற அகதிகளின் பட்டியல் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந்து இன்னும் வரவில்லை. அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பட்டியலைப் பெற்ற பிறகு, மாநிலத்தில் வாழும் மற்ற அகதிகளின் எண்ணிக்கை குறித்து அரசாங்கம்  முழு பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும் என தெரிகிறது. 

ஆக்ரா, ரே பரேலி, சஹரன்பூர், கோரக்பூர், அலிகார், ராம்பூர், முசாபர்நகர், ஹப்பூர், மதுரா, கான்பூர், பிரதாப்கர், வாரணாசி, அமேதி, ஜான்சி, பஹ்ரைச், பஹ்ரைச், லக்னோ, மீரட் மற்றும் பிலிபிட் உள்ளிட்ட மாநிலத்தின் 19 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பேரை யோகி அரசு தற்போது திரட்டியுள்ளது. இந்த பட்டியலை கொண்டு முஸ்லிம் அல்லாத அகதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டும் என கூறப்படுகிறது.

கணக்கெடுப்பின்போது, ​​பிலிபிட் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான அகதிகள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், இந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெற பிலிபிட் மாவட்ட நிர்வாகம் இந்த பட்டியலை மாநில உள்துறை அமைச்சகம் மற்றும் முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பியிருந்தது. இப்போது இந்த பட்டியலில் உள்துறை அமைச்சகம் செயல்படும் என கூறப்படுகிறது.

Trending News