Budget 2024: நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள்!

Budget 2024: இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரது 6வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இந்த இடைக்கால பட்ஜெட் புதிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை தொடரும்.  

Written by - RK Spark | Last Updated : Feb 1, 2024, 12:11 PM IST
  • பட்ஜெட்டில் வெளியாகி உள்ள அறிவிப்புகள்.
  • நடுத்தர மக்களுக்கு அதிக அறிவிப்புகள்.
  • விவசாயிகளுக்கு அதிக கடன் வழங்கப்படும்.
Budget 2024: நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள்! title=

Budget 2024: 2024ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வளர்க்கிறார். மக்களவை தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் கடைசி இடைக்கால பட்ஜெட் இது ஆகும்.  நிர்மலா சீதாராமனின் தாக்கல் செய்யும் ஆறாவது மத்திய பட்ஜெட் இது ஆகும். 2024 மக்களவை தேர்தல் முடிந்த பிறகு புதிய அரசால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.  

மேலும் படிக்க | Budget 2024: இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கப்போகும் சலுகைகள்!

தற்போதுவரை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:

- பாஜகாவின் இந்த இரண்டாவது ஆட்சியில், வளமான இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை இரட்டிப்பாக்கி உள்ளோம் என்று என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

- 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 'Viksit Bharat' ஆக்க மோடி அரசு செயல்பட்டு வருகிறது. எங்கள் கவனம் "sabka sath, sabka vikas" என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

- பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கிய பிரிவுகளின் மேல் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

- பிரதமர் ஜன்மன் யோஜனா பழங்குடியின மக்களுக்கு உதவுகிறது. எங்களது ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். அவர்களுக்கு எங்கள் அரசு உதவியுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அனைத்து ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் சுகாதார பாதுகாப்பு விரிவுபடுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

- மக்களவை தேர்தலில் மக்கள் மீண்டும் பாஜகவை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

- வட்டி விகிதங்கள் இல்லாத அல்லது குறைவான வட்டி விகிதங்களுடன் நீண்ட கால நிதியுதவியை வழங்க 50 ஆண்டு வட்டியில்லா கடனுடன் ரூபாய் 1 லட்சம் கோடி கார்பஸ் நிறுவப்படும்.  பாதுகாப்பு நோக்கங்களுக்காக தொழில்நுட்பத்தை வலுப்படுத்த புதிய தொழில்நுட்பம் தொடங்கப்படும்.

- நடுத்தர வர்க்கத்தின் தகுதியான பிரிவினருக்கு சொந்த வீடு கட்ட அரசு உதவும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | Budget 2024: தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா நிதியமைச்சர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News