Air India Express... 30 பேர் பணிநீக்கம்... மற்றவர்களுக்கு இறுதி எச்சரிக்கை..!!

ஏர் இந்தியாவி நிறுவனத்தின் 300 விமான பணியாளர்கள் மொத்தமாக மருத்துவ விடுப்பில் சென்றதை அடுத்து, நேற்று கிட்டத்தட்ட 90 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் 74 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 9, 2024, 02:55 PM IST
  • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் சுமார் 25 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  • விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
  • சுமார் 300 பேர் பணிக்கு வராததால், கிட்டத்தட்ட 90 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
Air India Express... 30 பேர் பணிநீக்கம்... மற்றவர்களுக்கு இறுதி எச்சரிக்கை..!! title=

Air India Express: நிர்வாகம் சரியில்லை, ஊழியர்களை நடத்துவதில் சமத்துவம் இல்லை போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து கடந்த மாதம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர் சங்கத்தினர் புகார் அளித்த நிலையில், புதன்கிழமை இரவு முதல் விமான நிறுவன ஊழியர்கள் பலர் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறி மொத்தமாக மெடிக்கல் லீவ் எடுத்து பணிக்கு வரவில்லை. சுமார் 300 பேர் பணிக்கு வராததால், கிட்டத்தட்ட 90 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பயணிகளும் கடும் அவதிக்குள்ளாயினர். இன்றும் 74 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது போன்ற சூழ்நிலையில், டிக்கெட்டைத் திரும்பப் பெறுவதைத் தவிர, பயணிகளுக்கு வேறு விமானத்தைத் தேர்வு செய்வதற்கான விருப்பத்தையும் விமான நிறுவனம் வழங்கியது. அதே நேரத்தில், இப்போது விமான நிர்வாகமும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் (Air India Express) சுமார் 25 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கேபின் பணியாளர்களுக்கு வியாழக்கிழமை மாலை 4 மணிக்குள் பணிக்குத் திரும்புமாறு விமான நிறுவனம் இறுதி எச்சரிக்கையும் விடுத்துள்ளத. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, நெருக்கடி நிலைக்கு தீர்வு காண முக்கிய கூட்டத்தை கூட்டியுள்ளார்.

பயணிகள் சந்திக்கும் பிரச்சனையை தீர்க்க விமான நிறுவனம் இப்போது தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஒரு அறிக்கையில், பயணிகளுக்கு குழு விமானங்களுடன் மாற்று விமானங்களில் பயணம் செய்வதற்கான ஆப்ஷனையும் நாங்கள் வழங்குகிறோம் என்று தெரிவித்துள்ளது. பயணிகள் தங்கள் திட்டமிட்ட பயணத்தை மேற்கொள்வதை உறுதிசெய்ய நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இது தவிர, பயணிகளுக்கு டிக்கெட்டை திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தையும் விமான நிறுவனம் வழங்குகிறது என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் போராட்டம்... 80+ விமானங்கள் ரத்து..!!

ஏராளமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பல விமான நிலையங்கள் பயணிகளால் நிரம்பி வழிகின்றன. விமானத்தின் இணையதளத்தில் 'விமானத்தின் நிலையை' சரிபார்த்த பின்னரே பயணிகள் வீட்டை விட்டு கிளம்புமாறு விமான நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்பட்ட பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறலாம். 

பயணிகளுக்கு எந்த கட்டணமும் கழிக்கப்படாமல் முழுமையாக பணம் திரும்பப் கொடுக்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. +91 6360012345 என்ற மொபைல் எண்ணில் வாட்ஸ்அப் மூலம் பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கோரிக்கைகளை பயணிகள் சமர்ப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இது தவிர, பயணிகள் airindiaexpress.com இனையதளத்தில் டிக்கெட் பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கோரிக்கையையும் கொடுக்கலாம்.

ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) நிறுவனங்கள் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரு விமான நிறுவனங்கள் இணைந்தால், இவற்றில் பணி புரியும் விமானிகளும் கேபின் குழு பணியாளர்களும் தங்கள் வேலைக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகின்றனர்.

மேலும் படிக்க | தென்னிந்தியர்களை ஆப்ரிக்கர்கள் எனக்கூறிய காங்.மூத்த தலைவர்! கண்டனங்களுக்கு பிறகு பதவி விலகல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News