அதிர வைக்கும் ஆரோக்கிய எச்சரிக்கை! ஐப்யூபுரூஃபன் பயன்படுத்துபவரா? பயமுறுத்தும் பக்க விளைவுகள்!

NSAID Ibuprofen Side Effects : வயிற்று வலி & காய்ச்சலுக்கு ஐப்யூபுரூஃபன் எடுத்துக்கொள்கிறீர்களா? அதிர்ச்சி தரும் 4 பக்க விளைவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 6, 2024, 06:20 PM IST
  • வலி நிவாரணி மருந்துகள்
  • மருந்துகளின் பக்கவிளைவு
  • எச்சரிக்கை விடுக்கும் ஆய்வின் அதிர்ச்சி முடிவு
அதிர வைக்கும் ஆரோக்கிய எச்சரிக்கை! ஐப்யூபுரூஃபன் பயன்படுத்துபவரா? பயமுறுத்தும் பக்க விளைவுகள்! title=

Medical Study : வயிற்று வலி மற்றும் காய்ச்சலுக்கு இப்யூபுரூஃபன் எடுத்துக் கொள்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆய்வு சொல்லும் விஷயங்கள் அதிர்ச்சி ஏற்படுத்துகின்றன.  இப்யூபுரூஃபன் என்பது ஸ்டீராய்டுஅல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் அல்லது NSAID குழுவிலிருந்து ஒரு மருந்து. இது நமது உடலில் உற்பத்தியாகும் புரோஸ்டாக்லாண்டின்களை தற்காலிகமாக குறைக்கும். தலைவலி, மாதவிடாய் வலி, வயிற்றுவலி, பல்வலி என உடலின் அனைத்து வலிகள் மற்றும் காய்ச்சலுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்து தொடர்பான ஆய்வு இது.

வலி நிவாரணி

பொதுவாக, இப்யூபுரூஃபன் உடலில் வலி நிவாரணியாக செயல்படுகிறது, இந்த வலி நிவாரணியை எடுத்துக் கொள்ள மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை, சுலபமாக கிடைக்கும் இந்த மருந்தை உட்கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.

இப்யூபுரூஃபன் பக்கவிளைவுகள்

மாரடைப்பு, ரத்தம் உறைதல், அல்சர், குழந்தையின்மை போன்ற பல பிரச்சனைகளை இப்யூபுரூஃபன் ஏற்படுத்தும் என்று அண்மை ஆய்வு ஒன்று கூறுகிறது. 

மாரடைப்பு மற்றும் பக்கவாதம்
'பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்' (British Medical Journal) படி, இப்யூபுரூஃபனை உட்கொள்வது இதயத் தடுப்பு அபாயத்தை 31 சதவீதம் அதிகரிக்கும் என்றும், இந்த மருந்தை அதிக காலம் உட்கொள்வது இதயத்திற்கான ஆபத்தை கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்.. இதை மட்டும் சாப்பிட்டே தொப்பை கொழுப்பை குறைக்கலாம்

காது கேளாமை
'அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜி' (Proceedings of the National Academy of Sciences) ஹார்வர்ட் ஆராய்ச்சியின் படி, இப்யூபுரூஃபனை தொடர்ந்து உட்கொள்வது கேட்கும் திறனைக் பாதிக்கும் என்று தெரிகிறது. அதிலும், வாரத்திற்கு இரண்டு முறை இப்யூபுரூஃபனை உட்கொள்ளும் பெண்களுக்கு 24 சதவீதம் காது கேளாமை பிரச்சனைகள் அதிகரித்திருக்கிறது.

அல்சர் வயிற்றில் ரத்தக்கசிவு  
ஐப்யூபுரூஃபன் புரோஸ்டாக்லாண்டின்களைக் குறைக்க வேலை செய்கிறது. இதனால் வயிற்றில் ஏற்படும் பக்கவிளைவுகளால் சேதம் அதிகமாகிறது. இது வயிற்றில் புண்கள் ஏற்படுவது மற்றும் இரத்தக்கசிவை ஏற்படுத்துகிறது.

கருவுறாமை
'Proceedings of the National Academy of Sciences' என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, தொடர்ந்து 6 வாரங்களுக்கு இப்யூபுரூஃபனை உட்கொள்ளும் இளம் வயதினருக்கு பாலியல் ஹார்மோன்களின் உற்பத்தி குறைகிறது. வழக்கமாக பாலியல் ஹார்மோன் உற்பத்தி என்பது வயதான ஆண்கள் மற்றும் புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படுகிறது.

18-35 வயதுடையவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 600mg அளவிலான ஐப்யூபுரூஃபனை ஒரு நாளைக்கு இரண்டு முறை என தொடர்ந்து 2 வாரங்களுக்கு உட்கொள்பவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைகிறது.

ஐப்யூபுரூஃபன் மருந்தை தேவையில்லாமல் உட்கொள்ளும் போதும், தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போதும் அதன் பக்க விளைவுகள் அதிகரிக்கின்றான. வலி நிவாரணியான ஐப்யூபுரூஃபன் மருந்தை, தேவைப்படும்போது மட்டும் குறுகிய காலத்திற்கு வலி நிவாரணியாக எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகளின் அபாயத்தை குறைக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது. தனிப்பட்ட முறையில் ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் பருமனை குறைக்க ஈசி வழி: இரவில் இப்படி, இதை சாப்பிடுங்க போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News