பேர்ல தான் லெமன்! ஆனா சர்க்கரை வியாதிக்கு எமன்! கர்ப்பூரப்புல் எனப்படும் லெமன்கிராஸ்

Lemongrass For Diabetes: செரிமான பிரச்சனைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்க கர்ப்பூரப்புல் பயன்படுத்தப்படுகிறது. இது பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 25, 2023, 11:08 AM IST
  • செரிமான பிரச்சனைகளை போக்கும் புல்
  • சிட்ரஸ் மணம் கொண்ட மூலிகை
  • உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் கர்ப்பூரப்புல்
பேர்ல தான் லெமன்! ஆனா சர்க்கரை வியாதிக்கு எமன்! கர்ப்பூரப்புல் எனப்படும் லெமன்கிராஸ் title=

லெமன்கிராஸ் என்று அறியப்படும் கர்ப்பூரப்புல் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது HDL (நல்ல) கொழுப்பின் அளவை அதிகரிக்கும் ஒரு அருமையான தாவரம். லெமன்கிராஸ் என்பது, சிட்ரஸ் வாசனை கொண்டதால் இந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் அதிகம் விளையும் கர்ப்பூரப்புல், அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது

சமையல் மற்றும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் லெமன்கிராஸை, அப்படியே பயன்படுத்தலாம் அல்லது காயவைத்தும் பயன்படுத்தலாம். இதன் இலைகள் மற்றும் தண்டுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட லெமன்கிராஸ் எண்ணெய் ஒரு சக்திவாய்ந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் சோப்புகள் மற்றும் பிற தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களில் காணப்படுகிறது.

லெமன்கிராஸ் ஆரோக்கிய நன்மைகள்

செரிமான பிரச்சனைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்க கர்ப்பூரப்புல் பயன்படுத்தப்படுகிறது. இது பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை உடனடியாக கட்டுப்படுத்த.. இந்த 5 உணவுகள் உதவும்

சர்க்கரை நோய்

நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த லெமன்கிராஸ் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைப் போக்க உதவும் நறுமண சிகிச்சையில் இது பிரபலமாக பயன்படுத்தப்படுகிரது.  

சர்க்கரை நோயாளிகளுக்கு லெமன்கிராஸ்
ஆரோக்கியமான விலங்குகளில் செய்யப்பட்ட ஆய்வுகள் மற்றும் நீரிழிவு நோயாளிகலுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளீன்படி, லெமன்கிராஸ் சாறுகள் மற்றும் அதன் உயிரியல் கூறுகள் இரத்த குளுக்கோஸ் அளவைக் கணிசமாகக் குறைப்பதில் திறனைக் காட்டியுள்ளன. எனவே, ஆயுர்வேதம் பரிந்துரைப்பதுபோல, லெமன்கிராஸ் எனப்படும் கர்ப்பூரப்புல்லை மூலிகைத் தேநீராகவோ அல்லது தேநீர் தயாரிப்பதிலும் பயன்படுத்தி பயனடையலாம். 

லெமன்கிராஸ் தேநீரை தினமும் குடிப்பது பாதுகாப்பானதா?
கர்ப்பூரப்புல்லை அதிகமாக உட்கொள்வது வாய் வறட்சி, சோர்வு, தலைச்சுற்றல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பசியின்மை அதிகரிப்பு மற்றும் சொறி மற்றும் அரிப்பு போன்ற ஒவ்வாமை எதிர்வினைகள் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, அளவுக்கு அதிகமாக பயன்படுத்த தேவையில்லை.

மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்

சர்க்கரை நோய்க்கு நல்லதா?
லெமன்கிராஸில் கலோரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது, இது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்றது. எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி இன்சுலின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. செரிமானத்திற்கு உதவும் மற்றும் ஏற்ற இறக்கமான இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் எளிதான நார்ச்சத்து நிறைந்தது.

இரத்தத்தை மெலிதாக்குமா?
இரத்தக் கட்டிகளைக் கலைத்து, இரத்த ஓட்டத்தைத் தூண்டும் என்பதால், இரத்தப்போக்கு கோளாறுகள் உள்ளவர்கள் அல்லது இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள், லெமன்கிராஸ் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

லெமன்கிராஸ் செடியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.

இது, பொதுவாக சமையலில் சுவை சேர்க்க பயன்படுத்தப்படுகிறது, இது கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இந்த எண்ணெயில் டெர்பெனாய்டு சேர்மங்கள் உள்ளன. இதில் உள்ள ஜெரானியோல் மற்றும் சிட்ரல், கெட்ட கொலஸ்ட்ராலின் எதிரிகள் என்று அறியப்படுகிறது.

லெமன்கிராஸ் எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது?
இந்த எண்ணெய் பொதுவாக அத்தியாவசிய எண்ணெயாகப் பயன்படுத்தப்படுவதில்லை, தேநீர் தயாரிக்கும்போது பயன்படுத்தலாம். உணவில் பயன்படுத்த விரும்பினால், சுவைக்காக தினமும் 2 முதல் 3 துளிகள் மட்டுமே பயன்படுத்தவும்.

மேலும் படிக்க | Weight Loss: வெயிட் குறைய வெந்தயத்தை இப்படி சாப்பிட்டா, சீக்கிரமா எஃபக்ட் கிடைக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News