போகமாட்டேன் போ! அடம் பிடிக்கும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தரும் வீட்டு வைத்தியம்!

Constipation Natural Remedies: மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற எத்தனை வழிகள் இருந்தாலும், அத்தனையையும் முயற்சி செய்து பார்த்து சோர்ந்து போனவரா? கவலை வேண்டாம்...  பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 20, 2024, 06:07 PM IST
  • தொல்லை தரும் காலைக் கடன்
  • காலைக்கடனுக்கு ’வலி’ வட்டி கட்டுபவரா நீங்கள்?
  • வலியுடனான போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி
போகமாட்டேன் போ! அடம் பிடிக்கும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தரும் வீட்டு வைத்தியம்! title=

உடல் ஆரோக்கியத்திற்கான பழக்க வழக்கங்கள் என பலதும் தெரிந்தாலும், சரியான சந்தர்பத்தில் அனைத்துமே காலை வாரி விட்டுவிடும். அதில் ஒன்று தான் மலச்சிக்கல். மலச்சிக்கல் என்று அவதிப்படுபவர்களுக்கு அறிவுரை சொல்வது எளிது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் நிறைந்த உணவு, ஆரோக்கியத்திற்கு அவசியமானவற்றை சாப்பிடுங்கள் சொல்லலாம்.

உண்மையில் இந்த உணவுகளே உடலில் பிரச்சனைகள் அதிலும் குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமலும் பாதுகாக்கின்றன, சமையலறையில் வைத்திருக்கும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தியே ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் என்பது உண்மை தான். ஆனால், சில நேரங்களில் எந்த பிரச்சனை இல்லாமலும் மலச்சிக்கல் ஏற்படும். 

அதுபோன்ற சமயத்தில் வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே நிவாரணம் பெறலாம். 

மலச்சிக்கலுக்குக் தீர்வு

சமையலறையில் இருக்கும் பொருட்கள் செரிமான பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, அஜீரணம், மலச்சிக்கல் போன்றவற்றுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். 

மேலும் படிக்க | செவ்வாழையை சாப்பிட்டா இதயத்துக்கு நல்லது! ஏன் எப்படி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்!

இஞ்சி தேநீர் 
மலச்சிக்கலைப் போக்க இஞ்சியைப் பயன்படுத்தலாம். இஞ்சியில் உள்ள பண்புகள் செரிமானத்தை மேம்படுத்தும். இது குடலின் இயக்கத்தை துரிதப்படுத்தும். இஞ்சியை வழக்கமான தேநீரிலும் பயன்படுத்தலாம். அதேபோல், சுக்கு கசாயம் வைத்து குடிக்கலாம். இதுவும் மலச்சிக்கலுக்கு அற்புதமான மருந்தாக செயல்படும். இஞ்சியை காயவைத்தால் அது சுக்காக மாறிவிடும்.  

மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும் புதினா இலைகள்
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற புதினா இலைகளை பயன்படுத்தலாம். செரிமான அமைப்பை மேம்படுத்தும் புதினா, தசைகளை தளர்த்தி பிடிப்புகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும். புதினா இலைகளை பயன்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கலாம்..

வெந்தயம்
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் வழங்க உதவும் வெந்தயத்தில் உள்ள ஃபைபர் சத்து உள்ளது. இது மலத்தை இலக்கிவிடும். குடல் இயக்கங்களை எளிதாக்க உதவும் தரமான நார்ச்சத்துக் கொண்ட வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் உண்டு வந்தால், காலைக்கடன் எளிதாக முடியும். வலி என்ற வட்டியை எப்போதும் வசூலித்துக் கொண்டிருக்கும் மலச்சிக்கலில் இருந்து வெந்தயம் நிவாரணம் தரும்.

மேலும் படிக்க | அடிவயிறு கொழுப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கா? அப்போ உடனே இதை படியுங்கள்

மலச்சிக்கலுக்கு மஞ்சள் 
அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்ட மஞ்சள், செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவும். மஞ்சளை உணவில் சேர்க்கலாம். இது தவிர, மஞ்சளை துணைப் பொருளாகப் பயன்படுத்தலாம். அதாவது பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது போன்றும் பயன்படுத்தலாம். இரவில் உறங்குவதற்கு முன்னதாக மஞ்சள் பால் குடித்துவிட்டு படுத்தால், அது மலச்சிக்கலையும் சீர் செய்யும். அதோடு, ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

மலச்சிக்கலுக்கு சீரகம் 

செரிமானத்தை மேம்படுத்த சீரகத்தைப் பயன்படுத்துவது வழக்கம். குடல் வழியாக உணவின் இயக்கத்தைத் தூண்ட உதவும் சீரகத்தின் மூலம், நாள்பட்ட மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க முடியும். சீரகத்தை உணவில் சமைத்தும் சாப்பிடலாம் அல்லது சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த வெந்நீரை குடித்து வருவதன் மூலமும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்.  

(பொறுப்பு துறப்பு: இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த... இந்த 5 பருப்புகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News