மாத்திரைகளின் ஸ்ட்ரிப்பில் காணப்படும் சிவப்பு கோடு... அதன் அர்த்தம் என்ன..!!

மாத்திரைகளின் ஸ்ட்ரிப்பில் அடிக்கடி சிவப்புக் கோடு இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதை பற்றி பலருக்கு தெரிவதில்லை. சாதாரண மனிதனிடம் அந்த சிவப்பு கோட்டின்  அர்த்தம் என்ன என்று கேட்டால், மருந்து கம்பெனியின் டிசைன் தான் என்று சொல்வார். 

Last Updated : Jan 5, 2024, 07:33 PM IST
  • மருந்துகளில் ஆன்டிபயாட்டிக்குகள் மிக முக்கியமானவை.
  • மருத்துவரை அணுகிய பின்னரே மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • காலாவதி தேதியைப் போலவே, சிவைப்பு கோடு மருந்து பற்றிய மிக முக்கிய விஷயங்களை சொல்கிறது.
மாத்திரைகளின் ஸ்ட்ரிப்பில் காணப்படும் சிவப்பு கோடு... அதன் அர்த்தம் என்ன..!! title=

Red Strip on Medicines: பொதுவாக பலர் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். பல சமயங்களில், சரியான சிகிச்சை மற்றும் மருந்து எடுத்தும், அவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை. இந்த அலட்சியத்தால், அவர்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைப்பதில்லை. நல்ல சிகிச்சைக்கு, மருந்து சரியாக இருப்பது மட்டும் முக்கியம் அல்ல. மாறாக உங்கள் செயலும் சரியாக இருக்க வேண்டும். இன்னும் சிலருக்கு தானாகவே எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்பட்டு அவதிப்படுவதையும் பார்த்திருக்கிறோம். பலர் மருந்துகளைப் பயன்படுத்தும்போது காலாவதி தேதியை சரிபார்க்கிறார்கள். ஆனால் மருத்துவத்தில் கலாவதி தேதி தவிர மற்றொரு விஷயம் உள்ளது. சாப்பிடுவதற்கு முன் அதை சரிபார்க்க மிகவும் முக்கியம். சில மாத்திரைகளின் ஸ்ட்ரிப்பில் சிவப்பு பட்டை வரையப்படுகிறது (Red Strip on Medicines). இதை மனதில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

மாத்திரைகளின் ஸ்ட்ரிப்பில் அடிக்கடி சிவப்புக் கோடு இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதை பற்றி பலருக்கு தெரிவதில்லை. ஆனால் அதப் பற்றி அறிய எபோதாவது முயன்று இருக்கிறீர்களா.. ஒரு சாதாரண மனிதனிடம் அந்த சிவப்பு கோட்டின்  அர்த்தம் என்ன என்று கேட்டால், மருந்து கம்பெனியின் டிசைன் தான் என்று சொல்வார். ஆனால் உண்மையில் அந்த வரிக்கு மிக முக்கியமான செயல்பாடு உள்ளது. இது பற்றி மக்களுக்கு மிகக் குறைவாகவே தெரியும்.

சிவப்பு கோடு தெரிவிக்கும் முக்கிய விஷயம்

காலாவதி தேதியைப் போலவே, இந்த சிவைப்பு கோடு மருந்து பற்றிய மிக முக்கியமான விஷயங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறது. உண்மையில், 2016 ஆம் ஆண்டில், இந்திய அரசின் (Government of India) சுகாதார அமைச்சகம் (Ministry of Health) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து ஒரு தகவலை பகிர்ந்து கொண்டு, இந்த சிவப்பு நிறக் கோடு பற்றிய தகவலை வழங்கியது. இந்த சிவப்புக் கோடு ஒரு வடிவமைப்பு மட்டுமல்ல, இதற்குப் பின்னால் ஒரு சிறப்பு அர்த்தம் மறைந்திருப்பதாகவும் அமைச்சகம் கூறியிருந்தது. மருந்துப் பொட்டலத்தில் சிவப்புக் கோடு போடப்பட்டிருந்தால், அந்த மருந்தை ஒரு போதும் மருத்துவரின் ஆலோசனையின்றி அவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது (மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையுடன் உட்கொள்ள வேண்டும் -  Medicines to be consumed with Doctor’s Prescription) ). இந்த மருந்துகளில் ஆன்டிபயாட்டிக்குகள் மிக முக்கியமானவை. இந்த சிவப்பு கோடுகள் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்தை உட்கொள்ளக்கூடாது என்பதற்கான அறிகுறியாகும்.

மேலும் படிக்க | மூளையின் சக்தியை காலி செய்யும் ‘சில’ ஆபத்தான பழக்கங்கள்!

மருத்துவரை அணுகிய பின்னரே மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்

நுண்ணுயிர் எதிர்ப்பிகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, மருந்துகளின் மீது சிவப்பு பட்டை பயன்படுத்தப்படுகிறது. பலமுறை கடைக்காரரிடம் மருந்து கேட்போம். அத்தகைய சூழ்நிலையில், துண்டுகளைப் பார்த்து, அந்த மருந்தை எவ்வாறு சாப்பிடுவது என்பதை நாம் சரிபார்க்கலாம்.

மேலும் படிக்க | கண்ட்ரோல் இல்லாம ஏறும் எடையை ஈசியா குறைக்க உதவும் சூப்பர் காலை உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

.

Trending News