கொளுத்தும் வெயில் ஏற்படுத்தும் கோரமான பிரச்சனைகள்! வெப்ப அலையில் சன் ஸ்ட்ரோக்!

Heat Stroke Alert: வெப்ப அலை காரணமாக குழந்தைகளுக்கு உடலின் நீர்ச்சத்து குறைந்து போகலாம்... இதற்கு சன் ஸ்ட்ரோக் எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக இருக்கலாம்..

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 15, 2024, 08:45 AM IST
  • கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கம்
  • குழந்தைகளுக்கு நீரிழப்பு ஏற்பட்டால் என்ன செய்வது?
  • கடுமையான சன் ஸ்ட்ரோக் அறிகுறிகள்
கொளுத்தும் வெயில் ஏற்படுத்தும் கோரமான பிரச்சனைகள்! வெப்ப அலையில் சன் ஸ்ட்ரோக்! title=

கோடை வெயில் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு வெயில் மிகவும் உக்ரமாக இருந்த நிலையில், பல மாவட்டங்களுக்கு அரசு ஆரஞ்சு அலர்ட் வெளியிட்டது. வெயில் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று சன் ஸ்ட்ரோக் (Sun stroke). ஹீட் ஸ்ட்ரோக் (heat stroke) என்றும் அழைக்கப்படும் இந்த கோடைக்காலப் பிரச்சனை மிகவும் ஆபத்தானது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, குழந்தைகளுக்கு சிறப்பு கவனிப்பு அவசியமானது. ஏனென்றால், குழந்தைகளின் உடல் மிகவும் மென்மையானது, எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் தொடக்கத்திலேயே கவனித்துவிட்டால் பிரச்சனையை சுலபமாக சமாளிக்கலாம். 

கோடையில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றான, உடலில் ஏற்படும் நீரிழப்பு பிரச்சனைக்கு காரணமாகிறது இந்த சன் ஸ்ட்ரோக்.  பல நேரங்களில் குழந்தைகளுக்கு தாகம் எடுத்தாலும் அதை அவர்களுக்கு சொல்லத் தெரிவதில்லை. எனவே, குழந்தைகளின் உடலில் நீர்தன்மை இருப்பதை பராமரிக்க வேண்டியது பெற்றோரின் முக்கியமான கவனமாக இருக்க வேண்டும். வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு அவ்வப்போது தண்ணீர் கொடுப்பதன் கொடுத்துவந்தாலே பாதி பிரச்சனை சரியாகிவிடும்.

வெப்ப அலை காரணமாக குழந்தைகளுக்கு உடலின் நீர்ச்சத்து குறைந்து போகலாம். அதிலும் பச்சிளம் குழந்தைகளுக்கு இதன் பாதிப்பு ஏற்பட்டால் அதை தெரிந்துக் கொள்வதற்கான சில அறிகுறிகளைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டை 100 டிகிரிக்கும் மேல் சுட்டெரித்த வெயில்! மாவட்டம் வாரியாக நிலவரம்

பச்சிளம் குழந்தைகளுக்கு சிறுநீர் கழிவது குறைந்தால் அது கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கை அறிகுறியாகும். ஈரமான டயப்பர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் குழந்தைக்கு அதிக அளவு நீர் கொடுக்க வேண்டும். 

அதேபோல குழந்தைகளில் சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாக இருந்தால், அது நீர்ச்சத்து உடலில் குறைந்து போனதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

குழந்தையின் வாய் வறண்டு போவது அல்லது அடிக்கடி நாக்கை நீட்டுவது என்பதும் நீர்ச்சத்து உடலில் குறைந்து போனதால் இருக்கலாம். குழந்தைகள் மிகவும் சோர்வாக இருந்தாலும், எந்த காரணமும் இல்லாமல் பலவீனமாக இருந்தாலும் அது நீரிழப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக இருக்கலாம்.

குழந்தைகள் கடுமையான வெயிலில் விளையாடினாலோ அல்லது நீண்ட நேரம் வெளியில் இருந்தாலோ நீரிழப்பு ஏற்படலாம். இதனால், குழந்தைகளுக்கு தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம். 

பச்சிளம் குழந்தைகள் அழும்போது கண்ணில் இருந்து கண்ணீர் வருவது குறைவதும் நீரிழப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். அதேபோல, குழந்தைகளில் கண்கள் வழக்கத்தை விட உள்ளே இருப்பதாக தோன்றினாலும், கண்களின் பளபளப்பு குறைந்து போனாலும் நீரிழப்புக்கான இரண்டாம் கட்ட அறிகுறியாக இருக்கலாம்.

மேலும் படிக்க | எந்த பாத்திரத்தில் சமைச்சாலும் ‘இந்த’ உணவுகளை இரும்புச்சட்டியில் சமைக்க வேண்டாம்!!!

குழந்தையின் தோலை லேசாக கிள்ளிப் பார்க்கவும். தோல் மீண்டும் வழக்கமான நிலைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டால், அது நீரிழப்புக்கான அறிகுறியாகும்.அதேபோல உடலில் அதிக சூடு இருந்தாலும், அது கடுமையான நீரிழப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

உடலில் நீர்ச்சத்து குறைந்து போகும் வெப்ப அலை, சன் ஸ்ட்ரோக், ஹீட் ஸ்ட்ரோக் போன்றவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிகளை தெரிந்துக் கொண்டால் பாதுகாப்பாக இருக்கலாம்.

குழந்தைகளுக்கு தாகம் இல்லாவிட்டாலும், அடிக்கடி தண்ணீர் கொடுங்கள்.
வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது எப்போதும் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொள்ளுங்கள்.
அணியும் ஆடைகள் தளர்வானதாகவும், பருத்தி ஆடைகளாகவும் இருக்கட்டும்
கடுமையான வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்கவும்.
உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள் மற்றும் திரவ உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுங்கள்.

குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் கோடை வெயிலால் பிரச்சனை ஏற்படும் என்பதால், தங்களையும் பராமரித்துக் கொள்வது அவசியமாகும்.

மேலும் படிக்க | காவு வாங்கும் கன்னியாகுமரி லெமூரிய கடற்கரை - 2 நாளில் 8 பேர் உயிரிழப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News