கருவளையங்களால் பிரச்சனையா? இப்படி செஞ்சி பாருங்க, உடனடி பலன் கிடைக்கும்

Tips To Get Rid Of Dark Circles: மேக்கப் மூலம் கருவளையங்களை குறைக்கலாம் என்றாலும், அதை முழுவதுமாக அகற்றுவது எளிதல்ல. கருவளையங்களைப் போக்கக்கூடிய சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 14, 2022, 05:34 PM IST
  • கருவளையத்திலிருந்து விடுபடுவது எப்படி?
  • உருளைக்கிழங்கில் வைட்டமின்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன.
  • க்ரீன் டீ பேக்கைப் பயன்படுத்துவதால், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் குறையத் தொடங்குகிறது.
கருவளையங்களால் பிரச்சனையா? இப்படி செஞ்சி பாருங்க, உடனடி பலன் கிடைக்கும் title=

கருவளையத்திலிருந்து விடுபடுவது எப்படி: கண்களுக்குக் கீழே கருவளையங்கள் ஏற்படுவது இன்றைய காலத்தில் மிகவும் பொதுவானதாகிவிட்டது. இதற்குக் காரணம், நாள் முழுவதும் கணினி முன் மணிக்கணக்கில் வேலை செய்வதாகும். போதிய தூக்கமின்மை, போனை அதிகம் பயன்படுத்துவது போன்ற பழக்கவழக்கங்களால் கருவளையம் ஏற்படும் அபாயம் அதிகமாகிறது. முகத்தின் கருவளையங்களை மறைப்பதும் எளிதல்ல. 

மேக்கப் மூலம் கருவளையங்களை குறைக்கலாம் என்றாலும், அதை முழுவதுமாக அகற்றுவது எளிதல்ல. கருவளையங்களைப் போக்கக்கூடிய சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

கருவளையத்தை குறைக்க வீட்டு வைத்தியம்:

உருளைக்கிழங்கு சாறு:

உருளைக்கிழங்கில் வைட்டமின்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. உருளைக்கிழங்கு சாற்றை தொடர்ந்து கருவளையங்களில் தடவினால், அவை படிப்படியாக குறையும். இதைப் பயன்படுத்த, முதலில் உருளைக்கிழங்கை அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் சாறு எடுக்கவும். அதன் பிறகு, ஒரு காட்டனின் உதவியுடன், உருளைக்கிழங்கு சாற்றை கண்களின் கீழ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும்.

மேலும் படிக்க | PCOS என்றால் என்ன? எளிய வழிகளில் இதை கட்டுப்படுத்துவது எப்படி? 

குளிர்ந்த டீ பேக்குகள் 

தேநீர் பைகளில் காஃபின் உள்ளது. இது இரத்த நாளங்களை கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் கருவளையங்கள் குறைகின்றன. க்ரீன் டீ பேக்கைப் பயன்படுத்துவதால், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் குறையத் தொடங்குகிறது.

குளிர்ந்த பால்:

குளிர்ந்த பால் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கருவளையங்களைக் குறைக்கவும் இது பயன்படுகிறது. இதற்கு முதலில் குளிர்ந்த பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் காட்டன் கொண்டு அந்த குளிர்ந்த பாலை கண்களுக்குக் கீழே தடவ வேண்டும். இதனை 10 நிமிடம் தடவி பின் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் கண்களின் கருவளையம் குறையும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Healthy Oils: விளக்கெண்ணெயை யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது தெரியுமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News