பழங்கள் மூலம் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவது சாத்தியமா? சாத்தியமாக்கும் பழங்களின் பட்டியல்!

Fruits To Lower Uric Acid In Tamil :  உடலில் யூரிக் அமிலத்தின் அளவு 6.8 mg/dL என்பதை விட அதிகமானால் என்ன செய்ய வேண்டும்? மருத்துவர்களின் பரிந்துரை இது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 28, 2024, 06:12 AM IST
  • யூரிக் அமிலத்தின் அளவு அதிகமானால் என்ன செய்ய வேண்டும்?
  • மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பழங்கள்
  • பழங்கள் மூலம் யூரிக் அமில கட்டுப்பாடு
பழங்கள் மூலம் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவது சாத்தியமா? சாத்தியமாக்கும் பழங்களின் பட்டியல்! title=

Hyperuricemia Control With Fruits : யூரிக் அமிலம் என்பது  உடலின் செரிமான உறுப்புகள் உருவாக்கும் இயற்கையான கழிவுப் பொருளாகும்.  இதற்கு காரணமாகும் பியூரின்கள் சில உணவுகளில் அதிகமாக இருக்கும். சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து யூரிக் அமிலத்தை வடிகட்டுகின்றன. அதிக ப்யூரின் உள்ளடக்கம் கொண்ட உணவுகளை உட்கொள்ளும்போதும், நமது உடல்  நச்சுகளை விரைவாக அகற்ற முடியாவிட்டாலும் உடலில் யூரிக் அமிலம் குவியத் தொடங்குகிறது. உடலில் யூரிக் அமிலத்தின் சாதாரண அளவு 6.8 mg/dL என்ற அளவில் இருக்கவேண்டும்.

இந்த அளவைவிட உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால், மூட்டுவலி, கால் வீக்கம் கீல்வாதம் என ஆரோக்கிய கோளாறுகள் அதிகரிக்கும். இதனால், பாதங்கள், கால்விரல்கள் மற்றும் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிந்து படிகங்கள் உருவாகலாம். இப்படி, மூட்டுகள், தசைநாண்கள் மற்றும் சுற்றியுள்ள திசுக்களில் யூரிக் அமிலம் படியும்போது வலி ஏற்படுகிறது.

இந்த நிலைக்கு நாம் உண்ணும் உணவு மற்றும் மரபணு காரணிகள் காரணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு உணவும், உடற்பயிற்சியும் சரியாக இருந்தால் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும்.

யூரிக் அமிலத்திற்கு உணவு கட்டுப்பாடு

சரியான உணவை உண்ணும்போது, ​​நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம். ஏதேனும் காரணத்தால் யூரிக் அமில சுரப்பு அதிகமாக இருந்தாலும், சரியான உணவுகளை எடுத்துக் கொள்வது,  ஓரளவு நிவாரணம் தரும்.  

மேலும் படிக்க | மிரட்டும் தொப்பை கொழுப்பை விரட்டி அடிக்கும் சூப்பர் உணவுகள்

இயற்கையாக யூரிக் அமிலத்தை எவ்வாறு குறைப்பது?

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் சில பானங்கள் சாப்பிட்டால், யூரிக் அமிலம் கட்டுப்படும். அதில் பழங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. உடலில் அதிகரித்து வரும் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த, உங்கள் உணவில் சில பழங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.  

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த வாழைப்பழம்

யூரிக் அமிலம் பாதித்த நோயாளிகளுக்கு வாழைப்பழத்தை உட்கொள்வது நன்மை பயக்கும். நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ஏராளமாக உள்ள வாழைப்பழம், யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்தும் வாழைப்பழம் நிவாரணம் அளிக்கிறது.

யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த ஆரஞ்சுப் பழம்

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த ஆரஞ்சு பழம் உதவும். வைட்டமின் சி ஏராளமாக உள்ள யூரிக் அமிலம் உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. தினசரி ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால், மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் குறையும்.

யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தும் ஆப்பிள்
யூரிக் அமிலத்தைக் குறைக்க ஆப்பிளை உட்கொள்ளலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆப்பிளில்  உள்ள மாலிக் அமிலம், யூரிக் அமிலத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை அகற்ற உதவுகிறது.

யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தும் அன்னாசி
அன்னாசிப்பழத்தை உட்கொள்வது யூரிக் அமில பிரச்சனையை போக்க உதவும். இதிலுள்ள புரோமிலைன் என்சைம், புரதங்களை உடைத்து வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. அதிக யூரிக் அமில பிரச்சனையை பெருமளவு குறைக்க அன்னாசிப்பழம் உதவும்.

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் செர்ரி
உடலில் அதிகரித்து வரும் யூரிக் அமில அளவைக் குறைக்க செர்ரிப் பழங்கள் உதவும். அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள செர்ரி வீக்கத்தைக் குறைப்பதுடன் யூரிக் அமில சுரப்பையும் கட்டுப்படுத்துகிறது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கர்ப்பம் தரிக்க உதவும் யோகாசனங்கள்! இத்தனை இருக்கிறதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News