Diabetes Diet: சுகர் லெவலை கட்டுப்படுத்த... வெள்ளரியை இப்படி சாப்பிட்டால் போதும்

Diabetes Diet: நீரிழிவு நோயாளிகள் வெள்ளரி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் உட்கொள்ளும் முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 1, 2023, 11:42 AM IST
  • வெள்ளரி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
  • குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.
Diabetes Diet: சுகர் லெவலை கட்டுப்படுத்த... வெள்ளரியை இப்படி சாப்பிட்டால் போதும் title=

Diabetes Diet Tips: இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படும் பிரச்சனைகளில் சர்க்கரை நோய் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதற்கு வாழ்க்கை முறையும் உணவு முறையும் பெரும் காரணங்களாக பார்க்கப்படுகின்றன. ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால் அவர் தனது உணவில் அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும். உணவில் காட்டும் சிறு அலட்சியம் கூட இவர்களுக்கு ஆபத்தாகலாம். சர்க்கரை அளவை கட்டுப்படுத்த எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்ற சரியான புரிதல் இருப்பது அவசியமாகும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிக காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் அத்தகைய ஒரு காயை பற்றி இந்த பதிவில் காணலாம்.

நீரிழிவு நோய்க்கு நிவாரணம் அளிக்கும் வெள்ளரிக்காய் (Cucumber Benefits for Diabetic Patients)

கோடை காலத்தில் நாம் அதிக அளவில் வெள்ளரிக்காயை உட்கொள்கிறோம். வெள்ளரிக்காயில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. இதனை உட்கொள்வதன் மூலம் நீரிழப்பு பிரச்சனையை தவிர்க்கலாம். வெள்ளரிக்காய் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. நீரிழிவு நோய் (Diabetes) எதிர்ப்பு பண்புகள் வெள்ளரியில் காணப்படுகின்றன. நீரிழிவு நோயில் வெள்ளரிக்காயை உட்கொள்வதன் மூலம், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோயாளிகள் வெள்ளரி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் உட்கொள்ளும் முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

நீரிழிவு நோயில் வெள்ளரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: 

1. வெள்ளரிக்காய் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது (Cucumber is Full of Antioxydants)

வெள்ளரிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் காணப்படுகின்றன. ஆகையால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நீரிழிவு நோயாளிகளை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. வெள்ளரிக்காய் உட்கொள்வது ஆன்டிஆக்ஸிடன் அழுத்தத்தைக் குறைக்கிறது.

2. வெள்ளரி இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது (Cucumber Lowers Blood Sugar Level)  

வெள்ளரிக்காய் நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். நார்ச்சத்து உட்கொள்வது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். ஒரு சிறிய வெள்ளரிக்காயில் 14 முதல் 15 கலோரிகள் இருப்பதால், வெள்ளரிக்காய் உட்கொள்வது உடல் பருமனைக் குறைக்க (Weight Loss) உதவுகிறது. நீரிழிவு நோயில் வெள்ளரிக்காயை சாப்பிடுவது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை (Blood Sugar Level) கட்டுக்குள் வைக்கும் என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தனியா: சுகர் லெவெல் முதல் இரத்த அழுத்தம் வரை.. அற்புதமான வீட்டு வைத்தியம், இப்படி உட்கொள்ளலாம்

3. வெள்ளரிக்காய் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது (Cucumber Have Low Glycemic Index)

வெள்ளரிக்காய் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். வெள்ளரிக்காயில் உள்ள சேர்மங்கள் கார்போஹைட்ரேட்டுகளை எளிய சர்க்கரை வடிவங்களாக உடைப்பதைத் தடுக்கின்றன. இதனால் சாப்பிட்ட பிறகு இரத்த குளுக்கோஸ் ஸ்பைக்கைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது.

4. வெள்ளரி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது (Cucumber Boosts Immunity)

வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இதனை உட்கொள்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நீரிழிவு நோயால் நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. அவர்கள் எளிதில் நோய்களுக்கு ஆளாகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நோய்களின் அபாயத்தைக் குறைக்க வெள்ளரியை உட்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காயை எப்படி உட்கொள்வது? 

- நீரிழிவு நோயாளிகள் மற்றும் சாதாரண மக்களும் ஒரு நாளைக்கு 1 முதல் 2 சிறிய அளவிலான வெள்ளரிகளை சாப்பிடலாம்.

- வெள்ளரிக்காயை அதன் தோலுடன் சாலட் வடிவிலும் சாப்பிடலாம்.

- வெள்ளரிக்காய் சாறு குடிப்பதும் நன்மை பயக்கும். காலையில் வெள்ளரிக்காய் சாறு குடிப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

- வெள்ளரிக்காய் ராய்தா அல்லது வெள்ளரிக்காய் சூப் குடிப்பது நன்மை பயக்கும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோய் இருப்பதே தெரியாமல் வாழும் மக்கள் வசிக்கும் நாடுகள்! விழிப்புணர்வு பற்றாக்குறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News