கெட்ட கொழுப்பை ஒரே வாரத்தில் சுலபமாக குறைக்க வழி! இந்த 6 இலைகள் இருக்க கவலை ஏன்?

Cholesterol Control Tips: எந்த கொழுப்பாக இருந்தாலும் சரி, அதிக அளவில் இருந்தால் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 28, 2023, 08:01 AM IST
  • கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் இலைகள்
  • வெறும் வயிற்றில் உண்டால் பலன் அதிகம்
  • கறிவேப்பிலையின் கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தும் தன்மை
கெட்ட கொழுப்பை ஒரே வாரத்தில் சுலபமாக குறைக்க வழி! இந்த 6 இலைகள் இருக்க கவலை ஏன்? title=

கொலஸ்ட்ரால் என்பது மனித உடலுக்கு நல்லதை மட்டுமல்ல, கெட்டதையும் செய்யும். நாம் உட்கொள்ளும் உணவை ஜீரணிக்க தேவையான ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் பிற பொருட்களை உருவாக்க கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. கொழுப்பால் ஆன கொலஸ்ட்ரால் என்பது, உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களிலும் உள்ளது, இதன் அளவு அதிகமானால் சிக்கல்களை ஏற்படுத்தும். நமது உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் இருக்கிறது. HDL கொழுப்பு நல்லது என்றும் LDL கொழுப்பு, உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் கெட்டக் கொழுப்பு என்றும் கூறப்படுகிறது.

எந்த கொழுப்பாக இருந்தாலும் சரி, அதிக அளவில் இருந்தால் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். எனவே, கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் கொழுப்புள்ள உணவுகள் உண்பதில் கவனமாக இருக்கவேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கையை பெற உணவில் கவனம் செலுத்துவது அவசியம்.

அதிகரித்த கொழுப்பை எப்படி ஒரே வாரத்தில் குறைக்கலாம் என்ற கேள்விக்கு, அது கஷ்டம் என்ற பதில் கிடைக்கலாம். ஆனால், கொழுப்பைக் குறைக்க ஒரு வாரம் போதும். சில இலைகளை தினமும் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால், கொழுப்பு குறைவதுடன் மாரடைப்பு அபாயமும் விலகிவிடும். 

மேலும் படிக்க | இஞ்சிக்கு மிஞ்சியது எதுவும் இல்லை! யாரெல்லாம் இஞ்சியை அதிகமா சாப்பிடக்கூடாது?

உடலில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் சுலபமாக குறைக்க வழி
 
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த துளசி (Basil Leaves in Empty Stomach)
துளசி இலைகளில் xenoyl உள்ளது, இது உங்கள் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். உங்கள் உடல் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளில் இருந்து விடுபட வேண்டுமெனில், அதன் இலைகளை கண்டிப்பாக மென்று சாப்பிடுங்கள்.

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் கொத்தமல்லி

கொத்தமல்லியை தொடர்ந்து உட்கொள்வது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் பல நன்மைகளை வழங்கவும் உதவும் கொத்தமல்லி இலைகளில் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக போராட உதவுகின்றன. கொத்தமல்லி பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்வாய்ப்படுவதைத் தடுக்கிறது. 

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த ஜாமூன் இலைகள்
ஜாமுன் இலைகள் இரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும், அவை கெட்ட கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்தும். இதன் சாற்றில் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) மற்றும் மிக குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (VLDL) கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்ட ஜாமூன் இலைகளை தினமும் வெறும் வயிற்றில் மென்று உமிழ்நீரை உமிழ்வதால் பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க | யூரிக் ஆசிட் ஏழரையை கூட்டும் பட்டாணி! ‘இந்த’ பிரச்சனை இருந்தா பச்சை பட்டாணிக்கு நோ தான்

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த முருங்கை இலை
முருங்கை இலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைவதைக் காணலாம் (Reduce Cholesterol). இது உங்கள் இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். முருங்கை இலை கசாயத்தை குடித்தால் 

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கறிவேப்பிலை கொழுப்பைக் குறைக்கும். இது ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கிறது, இது எல்டிஎல் கொழுப்பை கரைக்கிறது. எனவே வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவது பலன் தரும்.
 
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த வேப்பிலை
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும். வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கலாம். கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க வேண்டுமானால், வேப்ப இலைகளை தவறாமல் மென்று சாப்பிடுங்கள்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | மலச்சிக்கலுக்கு மட்டுமல்ல, கூந்தல் அழகுக்கும் முகப்பொலிவுக்கும் விளக்கெண்ணெய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News