தண்ணீர் மூலம் கொலஸ்ட்ராலை குறைக்கலாம் தெரியுமா? ஆனா, அதில் இந்த மசாலா இருக்கனும்

Cholesterol lowering tips with Masalas: சில மசாலாக்கள் உணவின் சுவையை கூட்டுவதற்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன... அதிலும் தண்ணீரில் கலந்து அருந்துவது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 20, 2023, 05:30 PM IST
  • தண்ணீரில் கலந்து பருகினால் கொலஸ்ட்ராலை குறைக்கும் மசாலாக்கள்
தண்ணீர் மூலம் கொலஸ்ட்ராலை குறைக்கலாம் தெரியுமா? ஆனா, அதில் இந்த மசாலா இருக்கனும் title=

உடலில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்குவது என்பது பலருக்கும் பெரும்பாடாக இருக்கிறது. இதற்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும், வீட்டு வைத்தியமாக இருக்கும் சில மசாலாக்கள் அற்புத பலன்களைத் தருகின்றன. அத்தகைய சிறப்பு மசாலாப் பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள், அதிலும் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதைவிட, தண்ணீரில் கலந்து அருந்துவது அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.

அதிக கொலஸ்ட்ராலுக்கு மசாலா நீர்
அதிக கொழுப்பு என்பது ஒரு நாள்பட்ட நோயாகும், பல உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளின் ஆபத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிக கொலஸ்ட்ரால் இருந்தால், இதயம் தொடர்பான பிற உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கலாம். உண்மையில், மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கம் காரணமாக, கொலஸ்ட்ரால் போன்ற நோய்களின் ஆபத்து அதிகரித்து வருகிறது.

சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் அதிக கொலஸ்ட்ரால் அபாயத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஏற்கனவே இந்தப் பிரச்சனை உள்ளவர்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

மேலும் படிக்க | உயர் ரத்த அழுத்தத்தில் 4 வகை: அதனை எவ்வாறு தடுக்கலாம்?

கொலஸ்ட்ராராலை கட்டுப்படுத்தும் வெந்தய நீர்  (Fenugreek Water For Cholesterol)
வெந்தயம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தி மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது, ஏனெனில் அவற்றில் உள்ள பல சிறப்பு கூறுகள் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அவற்றில் ஒன்று கெட்ட கொழுப்பு குறைவது ஆகும். 

கொலஸ்ட்ராலுக்கு இலவங்கப்பட்டை நீர் (Cinnamon Water For Cholesterol)
அதிக கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டையை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும், அதை தண்ணீரில் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று சிறிய இலவங்கப்பட்டையை சேர்த்து இரவு முழுவதும் ஊறவிடவும். காலையில் அதனைக் குடிக்கவும். இது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும்.

.diet plan
 
கொலஸ்ட்ராலுக்கு மஞ்சள் நீர் (Turmeric Water For Cholesterol)
உடலில் இருந்து கெட்ட கொழுப்பை அகற்ற உதவும் மஞ்சளை உணவில் பயன்படுத்துகிறோம். அதிக கொலஸ்ட்ராலை சமாளிக்க மஞ்சள் தண்ணீரையும் குடிக்கலாம்.. மஞ்சளில் உள்ள கூறுகள் இதயம் உட்பட பல உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 

மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை எரித்து பிபியை கட்டுப்படுத்தும் ‘சில’ அற்புத மசாலாக்கள்!

ஓமத்தண்ணீர் (Ajwain Water For Cholesterol)
அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள், ஓமத்தை அதிகம் பயன்படுத்தலாம். ஓமத்தின் விதைகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன, இவற்றை உட்கொள்வது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். காலையில் வெறும் வயிற்றில் ஓமம் ஊறவைத்த தண்ணீரைக் குடிப்பதால், அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம்.

கிராம்பு நீர் (Clove Water For Cholesterol)
கிராம்பு தண்ணீரைக் குடிப்பது கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் உடலில் சேரும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்க ஒரு நல்ல வழி. இரவில் மூன்று முதல் நான்கு கிராம்புகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் மூடி வைக்கவும். காலையில் தண்ணீரில் இருக்கும் கிராம்புகளை எடுத்துவிட்டு, அதன் தண்ணீரை மட்டும்  வெறும் வயிற்றில் பருகிவந்தால், நாளடைவில் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்க மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | நீரிழிவு முதல் எடை இழப்பு வரை... வியக்க வைக்கும் பார்லி புல் சாறு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News