இதை செய்தால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம்! ஜாக்கிரதை!

High Cholesterol: கெட்ட கொலஸ்ட்ரால் உங்கள் உடலில் அதிக கொழுப்பை உருவாக்குகிறது, ஆனால் ஹெச்டிஎல் அல்லது நல்ல கொலஸ்ட்ரால் இரத்தத்தில் உள்ள கொழுப்பை உறிஞ்சி மீண்டும் கல்லீரலுக்கு கொண்டு செல்கிறது.   

Written by - RK Spark | Last Updated : Mar 5, 2023, 06:27 AM IST
  • எல்டிஎல் கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
  • புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
  • மரபணு காரணமாக சிலருக்கு இளம் வயதிலேயே கொலஸ்டராலின் அளவு அதிகரிக்கும்.
இதை செய்தால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம்! ஜாக்கிரதை! title=

பெரும்பாலான மக்கள் கொலஸ்ட்ரால் என்றாலே அது உடலுக்கு கெடுதல் தரக்கூடிய ஒன்று என்று தவறாக நினைத்து விடுகின்றனர்.  ஆனால் உண்மையாக கொலஸ்ட்ரால் என்பது நமது உடலுக்கு தீங்கு விளைவிப்பவை கிடையாது, எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் தான் உடலுக்கு தீங்கினை ஏற்படுத்துகிறது.  ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் உடலுக்கு நன்மையளிக்கிறது.  எல்டிஎல் அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் உங்கள் உடலின் பெரும்பாலான கொழுப்பை உருவாக்குகிறது.  அதே சமயம் ஹெச்டிஎல் அல்லது நல்ல கொலஸ்ட்ரால் இரத்தத்தில் உள்ள கொழுப்பை உறிஞ்சி மீண்டும் கல்லீரலுக்கு கொண்டு செல்கிறது.  அதிக அளவு எல்டிஎல் கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கான ஆபத்தை அதிகரிக்கிறது.  கொழுப்பு நிறைந்த உணவை உண்பது, போதுமான உடற்பயிற்சி செய்யாதது, அதிக எடை, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற காரணங்களால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது.

மேலும் படிக்க |  மூளையை பலவீனமாக்கும் விட்டமின் B12 குறைபாடு! தவிர்க்க சாப்பிட வேண்டியவை!

தியாசைட் டையூரிடிக்ஸ், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற மருந்துகள், வித்தியாசமான ஆன்டிசைகோடிக்ஸ், பீட்டா-தடுப்பான்கள் மற்றும் சில ஹெச்ஐவி மருந்துகள் கெட்ட கொலஸ்டராலின் அளவை அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.  கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த வேண்டுமானால் நீங்கள் ஒருவர் புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.  புகைபிடித்தல், ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற வாழ்க்கை முறை காரணிகளைத் தவிர, உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்ற பிரச்சனைகளும் உடலில் கொலஸ்டராலின் அளவை அதிகரித்து விடுகிறது.  

மேலும் உடல் பருமன், சிறுநீரக நோய் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் போன்றவையும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதன் முக்கிய காரணியாக இருக்கிறது.  சிலருக்கு மரபணு காரணமாக இளம் வயதிலேயே உடலில் கொலஸ்டராலின் அளவு அதிகரித்து விடுகிறது.  இதுபோன்று இளம் வயதிலேயே உடலில் கெட்ட கொலஸ்டராலின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.  நீங்கள் தகுந்த நேரத்தில், தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால் வயதுக்கு ஏற்ப உடல்நிலை மோசமடையும்.  அதனால் கொலஸ்ட்ரால் அளவை அடிக்கடி மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொள்ளுங்கள் மற்றும் நீங்கள் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | மடமடனு எடை ஏறுதா? இந்த சூப்பர் ட்ரிங்கை குடிங்க... சட்டுனு குறையும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News