Post Office RD Account: ரூ.10,000 டெபாசிட் செய்து ரூ.16 லட்சம் வருமானம் பெறலாம்!

தபால் அலுவலகத்தின் இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 என்கிற கணக்கில், 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Aug 22, 2022, 10:32 AM IST
  • பாதுகாப்பான முதலீடு செய்ய தபால் அலுவலகத்தின் திட்டம் உள்ளது.
  • ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் ரூ.10,000 முதலீடு செய்வதன் மூலம் ரூ.16 லட்சம் வரை பெறமுடியும்.
  • ரெக்கரிங் டெபாசிட்டில் ஒவ்வொரு மாதமும் சரியான தொகையை முதலீடு செய்து வட்டியைப் பெறலாம்.
Post Office RD Account: ரூ.10,000 டெபாசிட் செய்து ரூ.16 லட்சம் வருமானம் பெறலாம்! title=

வயதான காலத்தில் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பலரும் பல்வேறு வகையான முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்ய விரும்புகின்றனர்.  ஆனால் முதலீட்டாளர்களுக்கு அவர்கள் முதலீடு செய்யும் திட்டமானது பாதுகாப்பானதா இல்லையா என்கிற குழப்பத்தை ஏற்படுகிறது.  உங்கள் பணம் பாதுகாப்பான முறையில் இருப்பதற்கும், பெரிய தொகையை வருமானமாக கிடைப்பதற்கும் தபால் அலுவலகத்தின் திட்டம் உள்ளது.  தபால் அலுவலகத்தின் ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் ரூ.10,000 முதலீடு செய்வதன் மூலம் ரூ.16 லட்சம் வரை பெறமுடியும்.

இது பிக்ஸட் டெபாசிட் கணக்குக்கு சமமானதாக இருக்கும், மேலும் இது பிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்வதைவிட எளிதானது.  ஏனென்றால் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளில் நீங்கள் தவணை முறையின்றி  ஒரே நேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும், ஆனால் தபால் அலுவலகத்தின் ரெக்கரிங் டெபாசிட்டில் ஒவ்வொரு மாதமும் சரியான தொகையை முதலீடு செய்து வட்டியைப் பெறலாம்.  இந்தக் கணக்கில் பணத்தை டெபாசிட்டுக்கு 5.8% வட்டி கிடைக்கும், கூட்டுத் தொகையின் மூலம் இந்த வட்டி ஒவ்வொரு மூன்றாவது மாதமும் சேர்க்கப்படும். 

மேலும் படிக்க | வீட்டுக்கடன் வாங்கணுமா? மிகக்குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் இதோ

பங்குசந்தையில் இருக்கும் ஏற்ற இறக்கத்தை போல இதில் உங்கள் பணத்திற்கு எவ்வித ஏற்ற இறக்கமும் வராது, அதனால் நீங்கள் பணம் பற்றி கவலைப்பட தேவையில்லை.  நீண்ட நாட்களுக்கு கணக்கில் உங்கள் பணம் இருந்தால் அதற்கு தகுந்தாற்போல அதிகளவில் வட்டி கிடைக்கும், அதனால் அதிக நன்மைகளை பெற நீண்ட காலத்திற்கு டெபாசிட் செய்யுங்கள்.  மேலும் குறைந்தபட்சம் ரூ.100 முதலீடு செய்தும் இந்த கணக்கை தொடங்கலாம், அதற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்ய விரும்பினால், அதை 10 ஆல் பெருக்கவும். அதிகபட்ச டெபாசிட் தொகைக்கு வரம்பு இல்லை.

தபால் அலுவலகத்தின் இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 என்கிற கணக்கில், 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய வேண்டும்.  10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.10,000-படி, தொடர் வைப்புத்தொகையில்,மொத்த முதலீடு ரூ.12 லட்சம்.  இதற்கு 10 ஆண்டுகளில் 5.8% வட்டி விகிதத்தில் ரூ.16,26,476 கிடைக்கும்.  அப்படி ஒவ்வொரு மாதமும் உங்களால் ரூ.10,000 வரை டெபாசிட் செய்ய முடியாதவர்கள் வேணுமென்றால் ஒவ்வொரு மாதமும் ரூ.3000 ரூபாய் டெபாசிட் செய்து,கிட்டத்தட்ட ரூ.5 லட்சத்துக்கும் மேல் பெறலாம்.

மேலும் படிக்க | EPFO வட்டி விகிதம் உயர உள்ளதா? மத்திய அமைச்சர் கொடுத்த மிகப்பெரிய தகவல்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News