சுந்தர் பிச்சை முதல் சத்யா நாதெள்ளா வரை... ஆயிரம் கோடிகளில் சம்பளம் பெறும் இந்திய CEOக்கள்!

Highest paid Top Indian CEOs: கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகிய மூன்றும் பல வணிகத் தலைவர்களை அதிக ஊதியம் பெறும் இந்திய CEO களாக ஆக்கியுள்ளன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 5, 2023, 08:41 PM IST
  • கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உள்ளார்.
  • 2019ம் ஆண்டில் ஆல்பபெட் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
  • ஐதராபாத்தில் பிறந்த சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு தலைமை தாங்குகிறார்.
சுந்தர் பிச்சை முதல் சத்யா நாதெள்ளா வரை... ஆயிரம் கோடிகளில் சம்பளம் பெறும் இந்திய CEOக்கள்! title=

அதிக ஊதியம் பெறும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி: கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகிய மூன்றும் பல வணிகத் தலைவர்களை அதிக ஊதியம் பெறும் இந்திய CEO களாக ஆக்கியுள்ளன. உலக அளவில் 160 பில்லியனர்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தொழில் செய்ய அனைத்து விதமான வசதிகளையும் இந்தியா வழங்கி வருவதாகவும், இதன் மூலம் அனைவரும் பயனடைவதாகவும் கூறப்படுகிறது.

சுந்தர் பிச்சை

கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உள்ளார். இவருக்கு 2022ஆம் ஆண்டுக்கான ஊதியமாக, இந்திய மதிப்பில் 1,846 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர் இந்தியாவில் உள்ள ஐஐடி காரக்பூரில் பொறியியல் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள வார்டன் வணிகப் பள்ளியில் எம்பிஏ படித்தார். 2019ம் ஆண்டில் ஆல்பபெட் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சத்யா நாதெல்லா

ஐதராபாத்தில் பிறந்த சத்யா நாதெல்லா உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு தலைமை தாங்குகிறார். அவரது சம்பளம் ரூ.4,15,64,20,500 என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாதெல்லா இந்தியாவில் கல்வி கற்றார். அவர் கர்நாடகாவின் மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் பட்டமும், மில்வாக்கியில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் எம்எஸ் பட்டமும் பெற்றுள்ளார். 1992-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்த நாதெல்லா, சிஇஓ பதவியை எட்டியுள்ளார்.

ஜெய் சௌத்ரி

ஹிமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான பனோஹ்விலிருந்து Zscaler இன் CEO ஆக ஜெய் சௌத்ரியின் வெற்றிப் பயணம் மிகவும் பாராட்டுக்குரியது. ஜெய் சவுத்ரியின் ஆண்டு சம்பளம் ரூ.3,46,56,83,520. ஒரு விவசாயியின் மகனான சவுத்ரி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஐஐடி வளாகத்தில் படித்தார். சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டங்களைப் பெறுவதற்காக அவர் அமெரிக்கா சென்றார். அங்கு, அவர் கிளவுட் செக்யூரிட்டி நிறுவனமான Zscaler ஐ நிறுவினார்.

மேலும் படிக்க | 1 ரூ.கோடி டர்ன்-ஓவர் செய்யும் விவசாயி! மத்திய அரசின் Billionaire award பெறும் ரமேஷ் நாயக்

அனிருத் தேவ்கன்

டெல்லியில் வசிக்கும் அனிருத் தேவ்கன் கேடென்ஸ் டிசைன் சிஸ்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் உள்ளார். அவரது ஆண்டு சம்பளம் ரூ.2,68,27,39,780. அமெரிக்காவில் படிப்பைத் தொடரும் முன் டெல்லி ஐஐடியில் பி.டெக் படித்தார். ஐபிஎம்மில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய தேவ்கன் பின்னர் மாக்மா டிசைன் ஆட்டோமேஷனில் கார்ப்பரேட் துணைத் தலைவராக பணியாற்றினார். 2012 ஆம் ஆண்டில், அவர் கேடென்ஸ் டிசைன் சிஸ்டம்ஸில் சேர்ந்தார் மற்றும் 2021 ஆம் ஆண்டில் CEO பதவியைப் பெற்றார்.

சாந்தனு நாராயண்

ஹைதராபாத்தில் பிறந்த சாந்தனு நாராயண் அடோப் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து வருகிறார். அவருக்கு ஆண்டு சம்பளம் ரூ.3,00,65,90,394. இந்தியாவில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த பிறகு, அமெரிக்காவில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். 1986 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்கிய நாராயண், 1998 ஆம் ஆண்டு அடோப் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு ஆப்பிள் நிறுவனத்திலும் பணிபுரிந்தார்.

மேலும் படிக்க | ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம்? வரம்பு மீறினால்... ரிசர்வ் வங்கி விதி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News