வெள்ளியங்கிரியில் மீண்டும் ஒருவர் பலி... அதிகரிக்கும் உயிரிழப்புகள் - எச்சரிக்கை விடுக்கும் வனத்துறை

Coimbatore Velliangiri Hills Death: கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறிய இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 28, 2024, 10:49 PM IST
  • கடந்த 2 மாதங்களில் இதோடு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • வனத்துறையினர் இங்கு பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
  • ஆன்மீக நாட்டத்தால் இங்கு அதிகம் பேர் வருகின்றனர்.
வெள்ளியங்கிரியில் மீண்டும் ஒருவர் பலி... அதிகரிக்கும் உயிரிழப்புகள் - எச்சரிக்கை விடுக்கும் வனத்துறை title=

Coimbatore Velliangiri Hills Death: இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் என்பது மிகவும் அதிகமாகிவிட்டது. இந்த சூழலில் பலரும் தங்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் சுற்றாத்துருக்கு உடனுக்குடன் தெரிவிக்கின்றனர் எனலாம். சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் பதிவிட்டே ஆக வேண்டும் என்பதும் தற்போது ஒரு வழக்கமாக இருக்கிறது. 

எனவே, திரைப்படங்கள் செல்வது, எங்காவது சுற்றுலா செல்வது என தொடங்கி அருகில் இருக்கும் பல விஷயங்களை உடனுக்குடன் பொதுவெளியில் தெரிவிக்கும் முனைப்போடு இருக்கின்றனர். இதனால், எங்காவது சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் எண்ணமும் அதிகரித்துள்ளது. இதனாலேயே, கோவையில் வெள்ளியங்கிரி போன்ற இடங்களுக்கு செல்வதை ஒரு சாகசமாக இந்த கால இளைஞர்கள் மேற்கொள்கின்றனர். ஆன்மீக நாட்டம், அதீத ஆர்வமும் இளைஞர்களை எவ்வித முன்னேற்பாடும் இன்றி இதுபோன்ற சுற்றுலா தளத்திற்கு வரவைக்கிறது.

ரீல்ஸ் மோகம்

இங்கு வந்து வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவது தொடங்கி, தங்களது முழு பயணத்தையும் பதிவு செய்து யூ-ட்யூப்பில் ஒரு தொகுப்பு வீடியோவாக பதிவிடுகின்றனர். இதற்காகவும் வெள்ளியங்கிரி மலைக்கு அதிகமானோர் பயணிக்கின்றனர். 

மேலும் படிக்க | அடுக்குமாடி கட்டத்தின் விளிம்பில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை!

மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் கோவை மாவட்டத்தில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். 

உச்சி வெயிலில் சுருண்ட இளைஞர்

பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (ஏப். 28) பிற்பகலில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 நபர்கள் வந்து அடிவாரத்தில் தரிசனம் முடித்து பூண்டி மலை ஏற சுமார் 12 மணிக்கு தொடங்கினார். ஒன்றாவது மழை ஏறும் போது சுமார் 1 மணி அளவில் 200 படிக்கட்டுகள் ஏறிய போது திடீரென புண்ணியகோடி என்பவருக்கு வயிறு வலிக்கிறது என்றும் கழிவறை செல்ல வேண்டும் என்றும் வாந்தி எடுத்து உள்ளார். 

உடன் இருந்தவர்கள் கீழே அழைத்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மாலை 5 மணிக்கு ஆலந்துறை பகுதியில் உள்ள பூலுவபட்டி அரசு மருத்துவமனையில் சோதனை செய்த போது ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து ஆலந்துறை காவல் துறைக்கு தகவல் தெரிவித்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஏப். 18ஆம் தேதியன்று காலை திருப்பூர் எஸ்.வி. காலணி பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் என்ற 31 வயதான நபர், தனது நணபர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறி உள்ளார். ஏழு மலைகள் ஏறி சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கும் போது, ஏழாவது மலையில் இருந்து கீழே விழுந்தார். அவரை கீழே இறக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த 2 மாதங்களில் மட்டும், அதாவது வெயில் அதிகம் அடிக்கும் இந்த மாதங்களில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். 

இதய நோய், ரத்த அழுத்தம் அதிகம் உள்ள நபர்கள், சர்க்கரை நோயாளிகள் இங்கு மலையேறுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர். இளைஞர்கள் உள்பட இங்கு வருவோர் அனைவரும் தங்களது உடல் முழுவதும் பரிசோதனை மேற்கொண்டு அதன்பின் உரிய மருத்துவ ஆலோசனை பெற்று இங்கு வர வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.   

மேலும் படிக்க | சமாதியில் இளைஞரின் தலை... இன்ஸ்டாவில் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டதால் கொலையா? - பகீர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News