மேஷத்தில் திரிகிரஹி யோகம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்

Trigrahi Yogam Formed In Aries: மேஷ ராசியில் சுக்கிரன், குரு, சூரியன் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. ஜோதிடத்தில், திரிகிரஹி யோகம் மிகவும் மங்களகரமான யோகமாகும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 28, 2024, 04:52 PM IST
  • வீட்டில் மகிழ்ச்சி நிலவும். செல்வ செழிப்பு பெருகும்.
  • மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெறலாம்.
  • திருமணம் நிச்சயிக்கப்படலாம்.
மேஷத்தில் திரிகிரஹி யோகம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும் title=

Trigrahi Yogam Formed In Aries: சுக்கிரன் கிரகம் மேஷ ராசியில் பெயர்ச்சியடைந்த பிறகு சுக்கிரன் ஏப்ரல் 28 ஆம் தேதி அதாவது இன்று அஸ்தமனமாகியுள்ளார். மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைந்துள்ளதால் திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. இதனிடையே சூரியன் மற்றும் குரு ஏற்கனவே மேஷ ராசியில் தான் பயணித்து வருகின்றனர். இதன் காரணமாக மேஷ ராசியில் சூரியன், குரு, சுக்கிரன் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால் திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. இந்த திரிகிரஹி யோகம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும், அதனால் சில ராசிகள் அதிக பலன் மற்றும் அதிர்ஷ்டத்தை பெறப் போகிறார். அவை எந்த ராசிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.

நான்கு ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் பலன்கள் கிடைக்கும்:

மேஷம் (Aries Zodiac Sign): திரிகிரஹி யோகம் (Trigrahi Yogam) மேஷ ராசியில் உருவாகி உள்ள நிலையில் தற்போது மேஷ ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் மேஷ ராசிக்காரர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். வாழ்வில் நிம்மதி அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களது பணி அதிகளவில் பாராட்டப்படும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். செல்வ செழிப்பு பெருகும்.

மேலும் படிக்க | Shash Rajyog 2024: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடுத்த 1 வருடம் நிறைய பண வரவு இருக்கும்!

கடகம் (Cancer Zodiac Sign): கடக ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் உருவாகி சாதகமான பலனை தரும். வியாபாரம் பெருகி அதில் அதீத லாபத்தை ஈட்டுவீர்கள். ஒவ்வொரு துறையிலும் சிறப்பான முடிவுகளைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த உங்களது வேலையை இப்போது முழுமையாக முடிப்பீர்கள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். குறிப்பாக திரைப்படம், ஊடகம், தகவல் தொடர்பு போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

துலாம் (Libra Zodiac Sign): துலாம் ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் சாதகமான பலன்களைத் தரும். தொழில், வியாபாரம், நிதி நிலை மற்றும் திருமண வாழ்க்கைக்கு இது ஒரு சிறந்த நேரமாக அமையும். உங்கள் நிதி நிலை முன்பை விட மேம்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெறலாம். வேலைக்கான தேடுதலில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். 

தனுசு (Sagittarius Zodiac Sign): தனுசு ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகமும் சுப பலனைத் உண்டாக்கித் தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு இப்போது நிறைவேறும். சொத்துக்களில் முதலீடு செய்வதற்கும் நல்ல சாதகமான நேரமாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உறவுனர்களின் வருகையால் நன்மை நடக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Sani Vakra Peyarchi Palangal: சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளின் தொல்லைகள் தீரும், பொற்காலம் பிறக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News