Weekly Horoscope: இந்த வாரம் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது... அதிர்ஷ்ட ராசிகள் எவை!

Weekly Horoscope: மார்ச் மாத முதல் வாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மார்ச் 7ஆம் தேதி அன்று சுக்கிர பெயர்ச்சி நடைபெறும். கும்ப ராசிக்கு செல்லும் சுக்கிரன், அங்கே ஏற்கனவே வீற்றிருக்கும் சனி பகவானுடன் இணைவார். இதனால் சனி சுக்கிரன் இணைவு ஏற்படும். 

இந்த வாரம் நிகழ உள்ள சுக்கிரன் பெயர்ச்சியினால் ஏற்படும் சனி சுக்கிரன் யுதி ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பதாக இருக்கும். இவர்களுக்கு மார்ச் மாதம் முதல் வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

 

1 /7

மார்ச் மாதம் நான்காம் தேதி தொடங்க உள்ள வாரத்தில், ஜோதிட ரீதியாக பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அதில் ஒன்று சுக்கிரன் பெயற்ச்சியும் அதனால் ஏற்படும், சனி சுக்கிரன் இணைவின் பலனை அனுபவிக்கப் போகும் 5 ராசிகள் யார் என்பதை அறிந்து கொள்வோம்.  

2 /7

ரிஷப ராசியினருக்கு மார்ச் 4ஆம் தேதியுடன் தொடங்கும் வாரம், அமர்க்களமான வாரமாக இருக்கும். தொழிலில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சம்பள உயர்வு பதவி உயர்வு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். எல்லா வகையிலும் வெற்றிகளைக் கொண்டு வந்து சேர்க்கும் வாரம் இது.

3 /7

கடக ராசியினருக்கு மார்ச் மாதம் நான்காம் தேதியுடன் தொடங்கும் வாரம், கனவுகளை நினைவாக்கும் ஒரு வாரம். வேலையில் மேலதிகாரியின் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

4 /7

சிம்ம ராசியினருக்கு மார்ச் மாதம் நான்காம் தேதியுடன் தொடங்கும் வாரம் இன்பத்தை அள்ளித் தரும் வாரமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு முழுமையாக கை கொடுக்கும். பணவரவு மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலையில் உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் கூடும்  

5 /7

துலாம் ராசியினருக்கு மார்ச் மாதம் நான்காம் தேதியுடன் தொடங்கும் வாரம், தடைகள் அனைத்தும் நீங்கும் ஒரு வெற்றிகரமான வாரம். வாழ்க்கையில் தடை கற்கள் அனைத்தையும் படிக்கல்களாக மாற்றி விடுவீர்கள். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. மொத்தத்தில் இந்த வாரம் மிக சிறப்பாக இருக்கும்.

6 /7

கும்ப ராசியினருக்கு மார்ச் மாதம் நான்காம் தேதியுடன் தொடங்கும் வாரம், அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் வாரம். வேலையில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால், திட்டமிட்டபடி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பார்கள். பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. அதனால் ஆதாயம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது