எச்சரிக்கை! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’உணவுகள்!

Side Effects Reheating Food: உணவுகள் மீண்டும் சூடுபடுத்தும் போது அவற்றின் சுவை, அமைப்பு மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை இழக்கின்றன. சில உணவுகள் சூடுபடுத்தும் போது உடலில் விஷம் போல் செயல்படும் என நிபுணர்கள் எச்சரிகின்றனர்.

இன்றைய துரிதமான வாழ்க்கையில் நம்மில் பலருக்கு, மீதமான உணவுகளை பிரிட்ஜில் வைத்து சேமித்து, பின்னர் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் உள்ளது. ஆனால், சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது, புற்று நோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிகின்றனர்.

1 /8

பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் விஷயத்தில், மிகவும் கவனம் தேவை. சில உணவுகளை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதால், அதன் ஊட்டச்சத்து, சுவை ஆகியவற்றை இழப்பதோடு, புற்று நோய் உட்பட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள்எச்சரிகின்றனர்.

2 /8

தேநீரில்,  ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் போன்ற கலவைகள். தேயிலை ஆரம்பத்தில் காய்ச்சும்போது அது டானின்கள் மற்றும் கேட்டசின்கள் போன்ற பல்வேறு சேர்மங்களை வெளியிடுகிறது. தேநீரை மீண்டும் சூடாக்குவது இந்த சேர்மங்களை சேதப்படுத்தும். மேலும், தேநீரின் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை இழக்க நேரிடும்.   

3 /8

காபியில் காஃபின் உள்ளது. அதை மீண்டும் சூடுபடுத்திய பிறகு குடிப்பதால், பதட்டம் அல்லது தூக்கமின்மை போன்ற பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால், அமிலத்தன்மை ஏற்படுத்துவதோடு செரிமானம் பாதிக்கும்.

4 /8

கீரையில் நைட்ரேட்டுகள் உள்ளன, அவை மீண்டும் சூடுபடுத்தும்போது நைட்ரைட்டுகளாக மாறும். நைட்ரைட் பின்னர் அமினோ அமிலங்களுடன் வினைபுரிந்து நைட்ரோசமைன்களை உருவாக்குகிறது, அவை புற்றுநோயை ஏற்படுத்தும். கீரையை மீண்டும் சூடாக்குவது வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி போன்ற கரையக்கூடிய நார்களை அழிக்கும்.

5 /8

அரிசியில் பைசில்லஸ் செரஸ் எனப்படும் பாக்டீரியாக்கள் இருக்கும். அரிசியை சமைக்கும்போது இந்த பாக்டீரியா அழிக்கப்படுகிறது. ஆனால் அரிசி குளிர்ந்தவுடன், இந்த கிருமிகள் மீண்டும் வேகமாக வளர ஆரம்பிக்கும். எனவே அவற்றை மீண்டும் சூடாக்கி சாப்பிட்டால், அந்த உணவு விஷமாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், அரிசியை மீண்டும் சூடுபடுத்தும் போது, ​​அது ஈரப்பதத்தை இழந்து காய்ந்து சுவையற்றதாக மாறும்.

6 /8

காளான்களில் உள்ள துளைகள் ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சி, பாக்டீரியா வளர சரியான சூழலை உருவாக்குகிறது. காளானை மீண்டும் சூடாக்குவது அவற்றில் பாக்டீரியாக்கள் வளரும் அபாயத்தை அதிகரிக்கிறது. காளான்களில் பாலிசாக்கரைடுகள் போன்ற சில சேர்மங்கள் உள்ளன. அவை மீண்டும் சூடுபடுத்தும்போது நொதி எதிர்வினைகளுக்கு உட்பட்டு அவற்றின் சுவை மற்றும் அமைப்பை மாற்றும்.

7 /8

சமையல் எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தும் போது, ​​அதில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு அதன் தரம் குறைந்து ஆரோக்கியமற்ற உணவாகிறது. சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கும் போது, அதில் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் ஆல்டிஹைடுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை அதிகரிக்கிறது. இது உடலில் வீக்கம் மற்றும் இதய நோய்களை அதிகரிக்கிறது.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.