ஓடிடியில் ரிலீஸான மஞ்சும்மல் பாய்ஸ்.. எந்த தளத்தில் தெரியுமா?

Manjummel Boys OTT Release: சூப்பர் ஹிட் திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 28, 2024, 03:09 PM IST
  • ஓடிடியில் மாஸ் காட்ட வரும் மஞ்சும்மல் பாய்ஸ்.
  • கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வெளியான திரைப்படம்.
  • ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
ஓடிடியில் ரிலீஸான மஞ்சும்மல் பாய்ஸ்.. எந்த தளத்தில் தெரியுமா? title=

Manjummel Boys OTT Release: சூப்பர் ஹிட் திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. எந்த தளத்தில் எப்போது வெளியா உள்ளது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வவோம்.

மஞ்சும்மல் பாய்ஸ்:
மலையாள சினிமாவை ஆவலுடன் பார்ப்பதற்காக தமிழ் நாட்டில் எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வழக்கமாக ஓடிடி தளங்களில் வெளியாகும் மலையாள படங்களை பார்த்து விட்டு அது குறித்து பேசும் மக்கள், கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்கிற்கு சென்று ஒரு படத்தை பார்க்க சொல்லி தனக்கு தெரிந்தவர்களிடம் கூறி வந்தனர். அந்த படம்தான், மஞ்சும்மல் பாய்ஸ். கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், உலகளவில் வசூலை குவித்து வெற்றிநடை போட்டது. இந்த படத்தை மலையாள இயக்குநர் சிதம்பரம் எஸ்.பொடுவேல் இயக்கியிருந்தார். பரவா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில், இப்படம் உருவானது.

மேலும் படிக்க | இசை பெரிதா? மொழி பெரிதா? – கவிப்பேரரசு வைரமுத்து கொடுத்த விளக்கம்!

உண்மை கதை:
2006ஆம் ஆண்டு கேரள மாநிலம், கொச்சி-மஞ்சும்மல் என்ற இடத்தில் இருந்து சில நண்பர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். வந்த இடத்தில், குணா குகையில் உள்ள தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்க்கின்றனர். அப்போது, வந்த நண்பர்களில் ஒருவர், பல அடி ஆழம் உள்ள “சாத்தானின் சமையலறை” என்று கூறப்படும் பல அடி ஆழ குகைக்குள் விழுந்து விடுகிறார். அவர் என்ன ஆனார்? அவரை உடன் இருந்த நண்பர்கள் மீட்டனரா இல்லையா? என்பதை சர்வைவல் த்ரில்லர் பாணியில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் கூறியிருக்கின்றனர். இப்படம், உண்மையாகவே கொடைக்கானலுக்கு சென்று அங்கு குணா குகையில் சிக்கி கொண்ட ஒருவர் குறித்து எடுக்கப்பட்ட கதை ஆகும். இதனாலேயே இப்படத்திற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்தனர். 

ரூ.200 கோடிக்கு மேல் வசூல்:
மஞ்சும்மல் பாய்ஸ் படம் மலையாள சினிமா வரலாற்றில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற மகத்தான சாதனையை படைத்தது. இப்படத்தின் இந்த மெர்சலான வெற்றிக்கு காரணம் தமிழ்நாட்டில் அதற்கு கிடைத்த வரவேற்பு தான். தமிழ்படங்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு தமிழக திரையரங்குகளை ஆக்கிரமித்த மஞ்சும்மல் பாய்ஸ், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

மஞ்சுமெல் பாய்ஸ் ஓடிடி ரிலீஸ் அப்டேட்:
இந்நிலையில் மகத்தான சாதனைகளை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என பலர் ஆவலுடன் காத்திருந்தனர். அதன்படி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் ரிலீஸ் அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வருகிற மே 5 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் மஞ்சும்மல் பாய்ஸ் தியேட்டரை போல் ஓடிடியிலும் சக்கைப்போடு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Ranbir and Sai Pallavi from Ramayana: ராமாயணம் ஸ்டில்ஸ் லீக்.. அழகே பொறாமைப்படும் பேரழகியாக சாய் பல்லவி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News