42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?

42 வயதாகும் ஒரு சீரியல் நடிகை, தற்போது கர்பமாகி இருக்கிறார். அவர் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Apr 28, 2024, 06:42 PM IST
  • 42 வயதில் கர்ப்பமான சீரியல் நடிகை
  • 2 முறை கரு கலைந்துள்ளது
  • உருக்கமாக கொடுத்த நேர்காணல்
42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?  title=

மகளிர் பலர், குறிப்பிட்ட வயதிற்கு மேலாகவும் கர்ப்பம் தரித்து பின்பு குழந்தை பெற்றெடுப்பது அதிசயமாக பார்க்கப்படுகிறது. நடிகைகள் பலரும் கூட, குழந்தை பெற்றுக்கொள்ள இயலாது என மருத்துவர்கள் கூறிய பிறகும் அவர்களின் வாழ்வில் அதிசயம் நிகழ்வதுண்டு. அது போன்ற ஒரு அதிசயம்தான், சீரியல் நடிகை ஒருவரது வாழ்வில் நிகழ்ந்திருக்கிறது. 

பிரபல சீரியில் நடிகை:

சின்னத்திரை உலகில், மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஜூலி. இவரது உண்மையான பெயர் விசாலாட்சி. தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் இவர் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார். சீரியல் வாழ்க்கையில் சில இடங்களில் வில்லியாக நடித்திருந்தாலும், நிஜ வாழ்வில் இவர் மிகவும் மென்மையானவர். 

இவர், சில நாட்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார். 

2 முறை குழந்தை கலைந்தது..

ஜூலி, தனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்த போதிலும் குழந்தை இல்லாமல் இருந்ததால் மிகுந்த மன வேதனையில் தவித்ததாக கூறியிருக்கிறார். அது போன்ற சமயங்களில் தான் பட்ட கஷ்டத்தை பகிர்ந்து கொண்ட அவர், காதல் திருமணம் செய்த தனக்கு, முதல் குழந்தை கலைந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். மேலும், இரண்டாவது முறையாக கருவுற்ற பொது அதுவும் கர்ப்பப்பை டியூபில் உருவானதால் அபாஷன் செய்ய வேண்டியதாக போய் விட்டதாக தெரிவித்திருக்கிறார். மூன்றாவது முறையாக கர்ப்பமான போது, தான் மிகவும் பயந்ததாகவும் ரிசல்ட் பாசிடிவ் என வந்தவுடன் தான் உடைந்து அழுது விட்டதாகவும் பேசியிருக்கிறார். 

Serial Actress Julie

இந்த வயதில் குழந்தை..

தனக்கு வயதாகி விட்டதாக கூறும் ஜூலி, மரூத்துவ ட்ரீட்மெண்ட் மூலமாகத்தான் இந்த கர்ப்பம் ஏற்பட்டதாகவும், தனக்கு குழந்தை பிறக்க போவதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், தான் கர்ப்பமாக இருப்பதை 5 மாதங்கள் வரை யாரிடமும் சொல்லாமல் இருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 

மேலும் படிக்க | கில்லி படத்தின் ஹாலிவுட் வெர்ஷன்! விஜய்யாக நடிக்கும் ஆங்கில ஹீரோ யார்?

தொடர்ந்து பேசிய அவர், தங்களுக்கு குழந்தை இல்லை என்பதால் சுப நிகழ்ச்சிகளுக்கு போவதைகூட தவிர்த்ததாகவும், மற்றவர்கள் இது குறித்தே தங்களிடம் கேட்டதால் தங்களுக்கு மன கஷ்டத்தை கொடுத்ததாகவும் பேசியிருக்கிறார். சமீபத்தில் வளைகாப்பு முடிந்ததாக கூறும் ஜூலி, அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள், இத்தனை நாட்களாக இதை எதிர்பார்த்து காத்திருந்ததாக கூறியதாக பேசியிருக்கிறார். 

ஜூலிக்கு குழந்தை பிறக்க இருப்பதை அவர் அறிவித்ததில் இருந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். பல ஆண்டுகளாக குழந்தை வரம் வேண்டி காத்துக்கிடக்கும் இந்த தம்பதியினருக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டிக்கொள்வதாகவும் சில ரசிகர்கள் பேசி வருகின்றனர். 

மேலும் படிக்க | குக் வித் கோமாளிக்கு போட்டியாகுமா மாஸ்டர் செஃப்? வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News