குக் வித் கோமாளிக்கு போட்டியாகுமா Top Cooku Dupe Cooku? வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!

Chef Venkatesh Bhat : குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து, அதற்கு போட்டியாக இன்னொரு நிகழ்ச்சியும் ஆரம்பிக்க உள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Apr 29, 2024, 10:35 AM IST
  • புதிய நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் வெங்கடேஷ் பட்
  • குக் வித் கோமாளி குறித்து அவர் போட்ட பதிவு
  • என்ன சொன்னார்?
குக் வித் கோமாளிக்கு போட்டியாகுமா Top Cooku Dupe Cooku? வெங்கடேஷ் பட் வெளியிட்ட  பதிவு! title=

Chef Venkatesh Bhat : தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுள் மிகவும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி. 4 சீசன்களை கடந்து 5வது சீசனில் இந்த நிகழ்ச்சி தற்போது அடியெடுத்து வைத்துள்ளது. தற்போது, இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக இன்னொரு நிகழ்ச்சி வரவுள்ளது. 

கோலாகலமாக ஆரம்பித் குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

தளபதி நடிகரின் பெயர் கொண்ட தாெலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான், குக் வித் கோமாளி. 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது 5வது சீசனை எட்டியிருக்கிறது. தொலைக்காட்சிகளிலும், சினிமா துறையிலும், டிஜிட்டல் தளங்களிலும் ஓரளவிற்கு பிரபலமாக இருப்பவர்களை வைத்து, இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். அந்த வகையில், இந்த சீசனிலும் அதே போல சில பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி, 5வது சீசனின் முதல் எபிசோட், நேற்று ஒளிபரப்பானது. இதில் புதிய கோமாளிகள், புதிய குக்குகள் என பார்க்கவே கலர்ஃபுல்லாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாறியிருக்கிறது. தற்போது, அதற்கு போட்டியாக இன்னொரு போட்டியை வேறு ஒரு சேனலில் ஒளிபரப்ப இருக்கின்றனர். 

போட்டியாக வரும் இன்னொரு நிகழ்ச்சி..

குக் வித் கோமாளி நிகழ்ச்சி, காமெடியையும் சமையலையும் ஒரு நிகழ்ச்சியாக தொகுத்து வழங்க, அது மெகா ஹிட் அடித்தது. ‘சூர்ய’ சேனலில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி ‘Top Cooku Dupe Cooku’. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க சீரியஸான குக்கிங் நிகழ்ச்சியாக இருக்கிறது. தற்போது, அந்த நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் குட்டி குட்டி ப்ரமோஷன் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதனால், குக் வித் கோமாளிக்கு போட்டியாக இந்த நிகழ்ச்சி வரவுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ஓடிடியில் ரிலீஸான மஞ்சும்மல் பாய்ஸ்.. எந்த தளத்தில் தெரியுமா?

என்ன பிரச்சனை?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து செஃப் வெங்கடேஷ் பட் விலகி விட்டதாக சில மாதங்களுக்கு அறிவித்தார். இவரை தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்தி கொடுத்து வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிக்கும் இவர்களுக்கும் ஏதோ பிரச்சனை என்பது மட்டும் ரசிகர்களுக்கு புலப்பட்டது. 

வெங்கடேஷ் பட் போட்ட போஸ்ட்:

வெங்கடேஷ் பட், ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், தனக்கு “மிஸ் பண்றேன்” என தனக்கு மெசஜ் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், சூர்யனின் ஆங்கில பெயர் கொண்ட தொலைக்காட்சியில் அனைவருக்காகவும் ஒரு சர்ப்ரைஸ் காத்துக்கொண்டுள்ளதாகவும் கூறினார். இதில் ஒருவர், உங்களை பற்றி யாருமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பேசாதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். இதற்கு அவர், “உண்மை ஒரு நாள் வெல்லும்” என பதிலளித்தார். இதனால், இவர்களுக்குள் ஏதோ பெரிய சம்பவம் நடைப்பெற்றுள்ளது உறுதிப்படுத்த பட்டுள்ளது. 

மேலும் படிக்க | கில்லி படத்தின் ஹாலிவுட் வெர்ஷன்! விஜய்யாக நடிக்கும் ஆங்கில ஹீரோ யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News