யூரிக் அமிலத்தை உடலை விட்டு விரட்டி அடிக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

Uric Acid Control: யூரிக் அமிலத்தை உடலை விட்டு வெளியேற்ற உதவும் ஆயுர்வேத மூலிகைகள் எவை என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் புரதமும் அமைகிறது. எனினும், உடலில் புரதத்தின் அளவு அதிகரிப்பதால் யூரிக் அமிலமும் அதிகரிக்கத் தொடங்கும். இதனால், கால்விரல்கள், முழங்கால்கள், கணுக்கால், மணிக்கட்டுகள் மற்றும் முழங்கைகளின் மூட்டுகளில் இரத்தத்தில் குவியத் தொடங்குகிறது.

1 /6

ஆப்பிள் சைடர் வினிகரில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல வித பண்புகள் உள்ளன. இது யூரிக் அமில அளவை குறைக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும்.

2 /6

இலவங்கப்பட்டையின் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் யூரிக் அமில அளவுடன் தொடர்பான நிலைமைகளை நிர்வகிக்க உதவுகிறது.

3 /6

யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த ஓமம் உதவியாக இருக்கும். தினமும் ஓம நீர் குடிப்பதன் மூலம் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம்.  

4 /6

இஞ்சி கீல்வாதத்தின் அறிகுறிகளைக் குறைக்கவும், யூரிக் அமில அளவைக் குறைக்கவும் உதவும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது.

5 /6

பல வித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஆளி விதைகள் யூரிக் அமில அளவைக் குறைக்கவும், உடல் எடை குறைக்கவும் உதவும்.

6 /6

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.