குரு குறி தப்பாது.. ரிஷப உதயத்தில் பணமழை பெறப்போகும் ராசிகள்.. ஜூன் மாத யோகம்

Guru Bhagavan: ஜூன் மாத தொடக்கத்தில் ரிஷப ராசியில் குரு பகவான் உதயமாகயுள்ளார். குரு பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.

 

நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகங்களில் ஒன்று தான் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் போன்ற வரத்தை அள்ளிக் கொடுக்கும் காரணியாக ஆவார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடிய குருபகவான் தற்போது மே மாதம் ஒன்றாம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார்.

1 /7

குரு பகவானின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் அஸ்தமனம் மற்றும் உதயம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி ராசி மாற்றம் செய்து பின்னர் இரண்டு நாட்களில் அஸ்தமனமானார்.  

2 /7

குரு உதயம்: குரு பகவான் அடுத்த மாதம் அதாவது ஜூன் மாத தொடக்கத்தில் உதயமாகின்றார். குரு பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் மூன்று ராசிக்காரர்களுக்கு மட்டும் அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

3 /7

ரிஷபம்: குரு உங்கள் ராசியின் முதல் வீட்டில் உதயமாகின்றார். இதனால் வெற்றி வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். நிதி நிலை மேம்படும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை தரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

4 /7

  கடகம்: குரு உங்கள் ராசியில் 11வது வீட்டில் உதயமாகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக பெறுவீர்கள். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடைபெறும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள்.

5 /7

சிம்மம்: குரு உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் உதயமாகின்றார். இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கலாம். சாதகமான பலன் கிடைக்கும். பணவரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். மாணவர்கள் வேலைக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறலாம். வணிகம் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறலாம். நிதி ரீதியாக உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.  

6 /7

குரு பகவான் மூல மந்திரம்: ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ!

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.