உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டால் சிறை செல்வீர்கள்! உஷார்

ஆதார் அட்டையை வைத்து செய்யப்படும் சில தவறுகள் மூலம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதம் வரை தண்டனையாக பெற வேண்டியிருக்கும். இதனால், ஆதார் விஷயத்தில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 18, 2024, 02:13 PM IST
  • ஆதார் மோசடியில் சிறை தண்டனை உண்டு
  • 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்
  • யார் ஆதாரையும் தவறாக பயன்படுத்த வேண்டாம்
உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டால் சிறை செல்வீர்கள்! உஷார் title=

ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். அது பல இடங்களில் தேவைப்படுகிறது. புதிய மொபைல் இணைப்பு பெறுவது முதல் அரசின் எந்த ஒரு திட்டத்தின் பலனையும் பெறுவதற்கும் ஆதார் அட்டை இல்லாமல் எந்த வேலை செய்ய முடியாது. இருப்பினும், வேறொருவரின் ஆதார் அட்டையைப் பயன்படுத்துவது அல்லது உங்கள் ஆதாரை தவறாகப் பயன்படுத்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது தவிர, ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் அட்டைகள் செய்திருந்தாலும், உங்கள் மீது நடவடிக்கை நிச்சயம்.

ஆதார் அட்டையை தவறாகப் பயன்படுத்துவது அல்லது மோசடி செய்வது சட்டவிரோதமானது என்பதும், அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதும் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்தினால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்தினால் என்ன மாதிரியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | ஜியோ : வெறும் 28 நாள் பிளானை ரீச்சார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம்!

ஆதார் அட்டை மோசடி ; அதற்கான தண்டனை விவரங்கள்

- ஆதார் பதிவு செய்யும் போது தவறான தகவல்களை வழங்கினால், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ 10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

- இது தவிர, ஆதார் அட்டை வைத்திருப்பவரின் பயோமெட்ரிக் அல்லது மக்கள்தொகை விவரங்களை தவறாகப் பயன்படுத்தினால் அல்லது மாற்றினால், அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ. 10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 - ஒரு நிறுவனம் அல்லது ஏஜென்சி மோசடியாக ஆதார் அட்டை தொடர்பான தகவல்களை சேகரிப்பது சட்டவிரோதமானது. அவ்வாறு செய்தால், ஒரு நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 வரை அபராதம் அல்லது நிறுவனத்திற்கு ரூ.1.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

- ஆதார் அட்டைக்கு தேவையான தகவல்கள் சேகரிப்பின்போது சேகரிக்கப்பட்ட தகவலைப் பகிர்ந்து அல்லது விற்பனை செய்தால், எந்தவொரு நபரும் அல்லது முகவரும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ 10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அதே நேரத்தில், நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும், ஹேக்கிங் அல்லது தவறான முறையில் ஆதார் டேட்டாவை அணுகுவது அல்லது டேட்டா திருடப்பட்டால், அவ்வாறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதைச் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், கடுமையான அபராதமும் விதிக்கப்படலாம்.

மேலும் படிக்க | 1000 ரூபாய்க்கும் குறைவாக 'நச்' ஸ்மார்ட்வாட்ச்கள்... எக்கச்சக்க அம்சங்களுடன் தள்ளுபடி விலையில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News