ஐபிஎல் 2024 : ஆர்சிபி வெற்றியால் சிஎஸ்கே அணிக்கு சிக்கலா? பிளே ஆஃப் வாய்ப்பில் அதிரடி மாற்றம்

IPL play-off chances : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதும் ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே ஆப் கணக்கு எல்லாம் மாறிப்போய் இருக்கிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 5, 2024, 12:04 PM IST
  • பரபரப்பான இறுதி கட்டத்தை எதிர்நோக்கும் ஐபிஎல்
  • ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் டாப் 4 அணிகள்
  • ஆர்சிபி அணியின் வெற்றியால் சென்னை சூப்பர் கிங்ஸூக்கு சிக்கலா?
ஐபிஎல் 2024 : ஆர்சிபி வெற்றியால் சிஎஸ்கே அணிக்கு சிக்கலா? பிளே ஆஃப் வாய்ப்பில் அதிரடி மாற்றம் title=

ஐபிஎல் 2024 இன் 52 வது போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தோற்கடித்தது. இது RCB இன் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாகும், அதே நேரத்தில் குஜராத் ஹாட்ரிக் தோல்விகளைப் பெற்றுள்ளது. டாஸ் இழந்து முதலில் பேட் செய்த குஜராத் அணியில் ஷாருக் கான் (37 ரன்கள்), டேவிட் மில்லர் (30 ரன்கள்), ராகுல் தெவாடியா (35 ரன்கள்) ஆகியோரின் இன்னிங்ஸால் 19.3 ஓவரில் 147 ரன்களுக்கு சுருண்டது. இலக்கை துரத்திய ஆர்சிபி அணி விராட் கோலி (42 ரன்கள்), ஃபாஃப் டு பிளெசிஸ் (64 ரன்கள்) ஆகியோரின் அதிரடி இன்னிங்ஸ் காரணமாக 13.4 ஓவரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி பிளேஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆர்சிபியும் புள்ளிகள் பட்டியலில் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது.

மேலும் படிக்க | ரோகித் இம்பாக்ட் பிளேயராக இறங்கியது ஏன்? விஷயம் தெரியாமல் பாண்டியாவை திட்டும் ரசிகர்கள்

புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி முன்னேறியது

ஐபிஎல் 2024ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இது நான்காவது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 8 புள்ளிகள் பெற்றுள்ளது. RCB இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 7 தோல்விகளை சந்தித்துள்ளது. குஜராத் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு 3 இடங்கள் முன்னேறி பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது 6 புள்ளிகளுடன் கடைசி இடத்திற்கு வந்துள்ளது.

ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம்

RCB அணி இன்னும் முதல் 4 இடங்களுக்குள் வரலாம், ஆனால் இதற்கு அந்த அணிக்கு அதிர்ஷ்டம் தேவை. இந்த சீசனில் பெங்களூரு அணி இன்னும் 3 போட்டிகளில் விளையாட உள்ளது, மேலும் பிளேஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்க அனைத்து போட்டிகளிலும் வென்றாக வேண்டும். இதுமட்டுமின்றி ரன் ரேட்டையும் அந்த அணி அதிகப்படுத்த வேண்டும். முடிவில் அந்த அணி 14 புள்ளிகள் பெற்றிருக்கும். அப்படியிருந்தும் ஆர்சிபி நேரடியாக பிளேஆஃப் அடைய இந்த புள்ளிகள் போதுமானதாக இருக்காது. 16 புள்ளிகளுடன் இருக்கும் அணிகள் நேரடியாக ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம். அதனால் மற்ற அணிகளின் முடிவுகளும் ஆர்சிபி அணிக்கு சாதகமாக அமைய வேண்டும். RCB தனது கடைசி மூன்று ஆட்டங்களில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை எதிர்கொள்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கல்

ஆர்சிபி அணியின் வெற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கலாக அமையுமா? என்றால், ஆம். சிஎஸ்கே எஞ்சியிருக்கும் 4 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இப்படியான சூழலில் ஆர்சிபி அணியுடனான போட்டியில் தோல்வியை தழுவினால் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு குறைந்துவிடும். அதனால், மற்ற அணிகளுடனான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கும். 

மேலும் படிக்க | தோனியின் தரம்சாலா மேஜிக் மீண்டும் நடக்குமா? சிஎஸ்கேவில் நடக்கப் போகும் முக்கிய மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News