IMD ALERT: ஊட்டியில் இப்படியா? மக்கள் அதிர்ச்சி.. 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

IMD Heatwave Yellow Alert: தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. உதகமண்டலத்தில் அதிகபட்ச  29.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக பதிவாகியுள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 29, 2024, 01:10 PM IST
IMD ALERT: ஊட்டியில் இப்படியா? மக்கள் அதிர்ச்சி.. 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! title=

Heatwave in Tamil Nadu: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நிலவி வருவதால், இயல்பை விட 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்துள்ளது. ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் 108 டிகிரியை தொட்டுள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளை நோக்கி குடும்பத்துடன் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஆனால் நீலகிரி மாவட்டம், ஊட்டியின் சில பகுதிகளில் அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் (84.2 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவானதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், "இன்று உதகமண்டலத்தில் அதிகபட்ச  29.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக பதிவாகியுள்ளது. இயல்பை விட 5.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது எனக் கூறியுள்ளது".

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு வெப்ப அலை மஞ்சள் எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மே 2 ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும். மேலும் இன்று தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூரில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும் படிக்க - கோடை விடுமுறை: வெப்ப சலனம் காரணமாக ஏப்ரல் 29 முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்படும்.

அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்

தென் இந்தியாவை பொறுத்தவரை தமிழகம், புதுசசேரி, உள் கர்நாடகம், கோவா, ராயலசீமா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தெலங்கானாவில் இன்று முதல் மே 1 ஆம் தேதி வரையும், கேரளத்தின் கொங்கன் பகுதிகளில் இன்றும் வெப்ப அலை வீசும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மே 5 ஆம் தேதிக்கு பிறகு அக்னி நட்சத்திரம் தொடங்கும் -ப்ரதீப் ஜான்

தமிழ்நாடு வானிலை நிலவரம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் ஜான் கூறுகையில், "வருகிற மே 1 ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவும், அதேபோல மே 5 ஆம் தேதிக்கு பிறகு அக்னி நட்சத்திரம் தொடங்கும் என்றும், அதன்பிறகு சில இடங்களில் லேசன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்".

மேலும் படிக்க - கோடை விடுமுறை: வெப்ப சலனம் காரணமாக ஏப்ரல் 29 முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்படும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News